இன்றைய இடுகைகள்

Sunday 15 February 2009

ஆன்லயன் கருத்துதளம்(Tamil Forum).

. Sunday 15 February 2009

எங்கள் இனிய தமிழ்வலை பதிவாளர்களே இதோ தமிழ் பிலாக்கர்ஸ் யூனிட்டில் மேலும் ஒரு புதுவரவாக ஆன்லயன் கருத்துதளம்(Tamil Forum) ஒன்றை தொடங்கியுள்ளோம்.இதில் உங்களுக்கு தோன்றும் சந்தேகங்கள்,உங்கள் கருத்துகள்,உங்களுக்கு தெறிந்த தகவல்கள்,அரசியல் விவாதங்கள் போன்ற பல அம்சங்கள் அடங்கிஉள்ளன மேலும் இதில் உங்கள் அனைவரின் ஆதரவை எங்களுக்கு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

5 comments:

Karthik said...

Get your own beautiful poll from pollopoll. It will give good impression to your blog.
Try it!
http://pollopoll.blogspot.com

jayan said...

கும்புடறேன் சாமி! நா ஒரு கை நாட்டுக் கேசுங்க. அல்லாரும் வலை, குருவி, கொக்குன்னு பீலா வுடறதைப் பாத்துப்புட்டு, நானும் ஒண்ணு ஆரம்பிச்சேனுங்க. நாலு நாளா ரூம் போட்டு யோசிச்சு, ஊரு உலகத்திலே யாரும் வைக்காத பெயரா ("ஙே"!) தேடிப்பாத்து, ஏதோ நமக்குத் தெரிஞ்ச நாலு வார்த்தையைப் போட்டு வைச்சிருக்கேனுங்க. ஆனா ஒரு பய எட்டிப் பாக்க மாட்டேங்காக.
ஏதோ ரயில் இஞ்சின் மாதிரி செர்ச் இஞ்சினாமில்லே, அதுல பெயர் கொடுத்தா அல்லாரும் வருவாகன்னாக. சரி, சந்தைக்கு யாவாரத்துக்கு வந்திட்டோம், கூவித்தானே விக்கணுமின்னு நினைச்சு தமிழ்மணத்துக்குப் போனா, அவுக ஏதோ ஒரு பொட்டிக்குள்ளே உன் சமாசாரத்தை எல்லாம் போட்டு ஒரு அமுக்கு அமுக்குனா ஏதோ ஒரு பட்டை வந்து நம்ம சைட்டிலே ஒட்டிக்குமுன்னு சொன்னாக. அட! இவ்வளவுதானா சமாசாரம்னு நானும் அவுக சொன்னபடி அமுக்கி, அமுக்கிப் பாத்தேன். இழவு, பழைய கிழவியே திரும்ப வந்து ஙேன்னு முழிக்குது. நம்ம டைட்டில் மாதிரியே.
உங்க சைட்டிலே வந்து தேடிப்பாத்தா ஏதோ வில்லையைக் கொடுத்து லேஅவுட்டிலே ஒட்டச் சொன்னீக. நானும் சிக்கெடுத்த கிழவிக்குப் பேன் பாத்த மாதிரி உத்து, உத்துப் பார்த்துத் தேடிப்புடிச்சு பேஸ்ட் பண்ணினா திரும்பவும் அதே கதைதான். தேதி மட்டும் தமிழிலே தெரியுது. பட்டை எங்கியோ போயி ஒளிஞ்சுக்கிச்சு. ஒரு வில்லையை ஒட்டுறதுக்கு இம்புட்டுக் கஷ்டம் தேவைதானா சாமி? கூகுள்ளே கொடுக்கிறாங்கள்ளே அதை மாதிரி ஒரு சிக்லட்டோ சாக்லட்டோ உங்களை மாதிரிப் பெரிய படிப்பு படிச்சவுக தயார் பண்ணி எங்களை மாதிரி ஏழை, பாளைகளுக்குக் கொடுத்தீங்கன்னா, நாங்க பாட்டுக்கு ஒரு கிளிக்கிலே ஒட்டிப்பிட்டுப் போய்க்கிட்டே இருப்போமில்லே. சரி, சாமி! போனாப் போவுது. நீங்களாவது பெரிய மனசு பண்ணி எம்புள்ளையை உங்க இஸ்கோல்லே (Tamil Bloggers Unit) சேர்த்துக்கோங்க. அதுகளுக்கு என்ன கொடுத்து வைச்சிருக்கோ அதுபடி ஆகட்டும்.
முகவரி:
http://jayan-comedy.blogspot.com/

Jaleela said...

ஜெயன் உங்கள் பதிவை படிச்சி நல்ல சிரிச்சாச்சு.

ஹா ஹா

" ஙே" தலைப்பு இத தான் ரூம் போட்டு யோசித்து வைத்ததா?

முனைவர் சே.கல்பனா said...

நல்லாதான் எழுதியிருக்காரு..........

Anonymous said...

நல்லா தான் எழிதிக்கீரே முன்னுக்கு வந்துடுவே பயப்படாதே தம்பி

Post a Comment