Friday, April 12, 2013

தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (8)


தியாகராஜசுவாமிகளின் சிந்தனைகள் (8)





ஹரிஎன்று நாவினால் 
உரைப்பவர்களுக்கு 
நிகர் யாருளர்? 




























மனதின் பலவகைப்பட்ட 
எண்ணங்களை வெறுத்து 
ஸ்திரமான பக்தியை மேற்கொண்டு 
வீணான மத வேறுபாடுகளை 
அறுத்து உள்ளமுருகி மனதில் 
ஆசை கொண்டு 
அரியின் திருவடிகளை 
இதயத்தில் அமர்த்தி 
ஸ்ரீ சுகப்ரம்மத்தின் மொழிகளே 
செல்வமெனக்கருதி 
ஹரிஎன்று உரைப்பவர்களுக்கு
 நிகர் யாருளர் ?

இவ்வின்பத்தை அறியாத 
மாந்தரின் நட்பு வாசுகி 
என்ற பாம்பின் விஷமெனவும் 
துருத்தியினால் ஊதப்படும் 
உலைஎனவும் கருதி 
மெய் அடியார்களுடன்   
சம்பாஷனை புரிவதே 
வலிமை என்று  துணிந்து ஜபம் 
செய்வதன் மூலம் 
இதயத்தை விரைவில் 
மலரச்செய்யும் 
(தியாகராஜன் துதிக்கும் பகவானின் 
பல திருநாமங்களை நன்றாக சுவைத்து 
ஹரிஎன்று கூவுகிறவர்களுக்கு  இணை யாருளர்) 

எப்படி சூரியனை கண்டதும் 
தாமரை மலர்கிறதோ அதுபோல் ஹரி 
என்னும்நாமத்தை பக்தியுடன் ஜபிப்பதால் 
நம்முடைய இதய தாமரை மலரும் 
என்ற கருத்து இந்த பாடலில் 
வெளிப்படுத்தப்படுகிறது.

மேலும் அதற்க்கு தடையாக உள்ள 
மாந்தர்களோடு கொள்ளும் நட்பு 
கொடிய விஷமாக கருதவேண்டும் 
என்றும் வலியுறுத்துகிறார் ஸ்வாமிகள். 

மேலும் இறை நாமத்தை 
ஓதாத இந்த உடல் வெறும் தோலினால் 
செய்யப்பட்டதுருத்தியினால் காற்று 
செலுத்தப்படும் உலைக்கு சமமாகும் 
என்றும் கூறுகிறார். ஸ்வாமிகள். 

அப்படிப்பட்ட பக்தர்களுக்கு
 நிகர் யாரும் இல்லை
 என்றும் கூறுகிறார் 
(கீர்த்தனை-ஹரி யநுவாரி-(489)-ராகம் தோடி-தாளம்-ஆதி)

1 comment: