Friday, June 21, 2013

தியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(90)

தியாக ராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(90)


























இராமா 
நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்?

கீர்த்தனை(211)-மாறுபல்க குன்னா வேமிரா ...
ராகம்-ஸ்ரீரஞ்சனி-தாளம்-ஆதி 

திருமகளின் மனத்திற்க்கினியவனே1

நீ மறுமொழி கூறாமல் இருப்பதேன்?

அயோத்தியில் உறைபவனே!

விட புருடரையும் ,திருடர்களையும்
போற்றி நான் பஜனை செய்தேனா?

வெகுதூரத்திலும்,(சமீபத்தில் )
என் இதயத்தாமரையிலும்
அமர்ந்திருக்கும்  உன்
வழியை அறிந்து மகிழ்சியுற்றிருக்கும்
எனக்கு (நீ மறுமொழி கூறாமலிருப்பதேன்?)

மிக இனிமையான கீர்த்தனை 

இராமபிரானைத் தவிர
வேறு சிந்தனையற்றிருக்கும் ஸ்வாமிகள்
தனக்கு அவன் இன்னும் அருள் செய்யாமல்
தாமதம் செய்தமையால்
மேற்கண்டவாறெல்லாம்
கேள்விகளை எழுப்புகிறார்.

நாம் முதற்கட்டத்தில் இறைவன்
எங்கோ இருப்பதாக
எண்ணித்தான் வணங்குகிறோம்.

 நமக்கு ஞானம் வரும்போது
அவன் நாம் உள்ளத்திலே உறைகின்றான்
என்பதை உணருகின்றோம்.

மேலும் நாம் தீயவர்களையும்,
பிறர் சொத்தை அபகரிப்பவர்களையும்
எந்த காரணம் கொண்டு
அற்ப ஆதாயங்களுக்காக போற்றலாகாது.

அதனால் கிடைக்கும் நன்மைகளை விட
தீமைகள் தான் அதிகம் உண்பதை
உணர்ந்துகொள்ளவேண்டும்.

பிறவிக் கடலில் விழுந்து தவிக்கும் நம்மை
காப்பாற்றி கரைசேர்க்கும் இறைவனைதான்
நாம் முழு மனதுடன் வழிபடவேண்டும்.

5 comments:

  1. //கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் உண்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்...//

    உண்மை தான் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. நமக்கு ஞானம் வரும்போது
    அவன் நாம் உள்ளத்திலே உறைகின்றான்
    என்பதை உணருகின்றோம்.

    ஞானப்பிரகாசமான இறைவனை
    ஞானதீபமாக உணர்த்திய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  3. அருமை. ரஸித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete