Monday, September 30, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(5)

ஒளிவு மறைவின்றி
செயல்பட்டான் பரதன்.

அனைவரின் முன்பாக இராமனை மீண்டும்
நாட்டிற்கு வந்து அரசாள வேண்டினான்.

ஆனால் இராமனோ தந்தை சொல்
 மிக்க மந்திரமில்லை என்ற வாக்கை
மெய்பிக்கும் வகையில் அவன்
வேண்டுகோளை மறுத்துவிட்டான்.
அவன் தாயின் விருப்பப்படி 14 ஆண்டுகள்
அயோத்தியை ஆட்சி செய்யுமாறு அறிவுறுத்தினான்.

அப்போது பரதன் நான் நாட்டை
உங்கள் சார்பாகத்தான் ஆட்சி புரிவேன் என்றும்
தன்னால் அரசாட்சியை ஏற்ற்றுகொள்ள
 இயலாது என்று கூறினான்.

அவன் இராமன் ஸ்ரீமன் நாராயணனின்
அவதாரம் என்பதை அறிந்திருந்தான்போலும்.

அதனால்தான் இராமபிரானின் பாதுகைகளை
அளிக்குமாறும் அதற்க்கு பட்டாபிஷேகம்  செய்து
அவன் சார்பாக அவனும் மரவுரிக்கோலம்
தரித்து நாட்டை ஆள்வதாக வேண்டினான்.





எப்போதும் அனைவரும் இறைவனின்
 கையை வணங்குவதில்லை.

இறைவனின் திருவடிகளைதான்
வணங்குகின்றனர்.

திருவள்ளுவரும் பிறவிப் பெருங்கடலை
கடக்க உதவுவது இறைவனின் திருவடிகளே
என்று அறுதியிட்டு கூறியுள்ளார்.

அதனால்தான் இறைவன்
திருவடி சம்பந்தம் பெற்ற
பாதக்குறடுகளை அளிக்குமாறு
பரதன் வேண்டினான்.



பாதக்குறடுகளை பாதுகை என்று
அழைக்கக் காரணம். அது
அடியவர்களை பாதுகாக்கும் கை.

மேலும் அதற்க்கு பாத ரட்ஷை
என்றும் பெயர் உண்டு.
அது வணங்குபவர்களை எல்லா
ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் ரக்ஷையாக ,
கவசமாக விளங்குகிறது.

அதனால்தான் சுவாமி வேதாந்த தேசிகன்,
பாதுகைகள் மீது அதன் மகிமையை விளக்கும்
வகையில் பாதுகா சகஸ்ரம்  என்று 1000 பாடல்களை
இயற்றியுள்ளதே அதன் பெருமைக்கு சான்று.

பரதன் பாதுகைகளை பெற்றுக்கொண்டு
நாட்டின் எல்லையில் அதற்க்கு முடிசூட்டி
அவனும் தவக்கோலத்தில் நின்று
நல்லாட்சி 14 ஆண்டுகள்  செய்து
இராமனின் வரவிற்காக காத்திருந்தான்.



இந்த தியாகத்தால்தான் ஆயிரம் ராமர்கள்
ஒன்று சேர்ந்தாலும் ஒரு பரதனுக்கு ஈடாக மாட்டார்கள்
என்று அவன் புகழ் பெற்றான்.

பரதனைப் போல் மக்கள் முன்பாக
ஒரு செயலைச் செய்யாமையால்
இராமபிரான் பெருந்துன்பம் அடையநேர்ந்தது
. (இன்னும் வரும்)

pic.courtesy-google images.

4 comments:

  1. "இறைவனின் திருவடிகளே" என்பதை உணர வேண்டும்... உண்மை ஐயா...

    ReplyDelete
  2. //பாதக்குறடுகளை பாதுகை என்று அழைக்கக் காரணம். அது அடியவர்களை பாதுகாக்கும் கை.

    மேலும் அதற்க்கு பாத ரட்ஷை என்றும் பெயர் உண்டு. அது வணங்குபவர்களை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும் ரக்ஷையாக ,
    கவசமாக விளங்குகிறது.//

    சூப்பரான விளக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. பரதனின் பெருமை அறிந்தேன் நன்றி ஐயா

    ReplyDelete