Sunday, September 29, 2013

கண்ணன் என்னும் திருவடிவம்

கண்ணன் 
என்னும் திருவடிவம்

காண்போர் மயங்கும்
ஒரு வடிவம்




அதுதான் கண்ணன் 
என்னும் திருவடிவம்

நான்மறைகள் போற்றும்
நாயகன் அவன்
நல்லோர்கள் நாடும்
தூயவன் அவன்

உலகம் யாவையும்
படைத்தவனவன்

உயிர்கள் யாவினும் உள்ளொளியாய்
இருந்து இயக்குபவனவன்

மலரும் அவனே,அதிலிருந்து
வீசும் நறுமணமும் அவனே

பரிதியாய் பாரில் ஒளி
வீசுபவனும் அவனே

வணங்கும் பக்தரின் மனதில்
தங்கி அருள்பவனும் அவனே

விண்ணோர்
வணங்கும் பாதன்

வியக்கவைக்கும் செயல்களை
ஆற்றும் லீலாவிநோதனவன்

அன்பாய் அவன் திருவடியில்
மலரிட்டால் ஆனந்த
வாழ்வருளுவான்

பசித்தோர் பிணி தீர்ப்பவனை
பாசத்தோடு பக்கத்திலிருந்து காப்பான்

வாடுபவரின் வாட்டம் போக்கும்
உள்ளங்களை உலகம் போற்ற
உயர்த்தி வைப்பான்.

எண்ணமெல்லாம்
நீ நிறைந்துவிட்டால்
வண்ணமயமாய் வாழ்வு
அமைய தடையேது? 

3 comments:

  1. அருமை... எண்ணமெல்லாம் நிறைக்க வேண்டும்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. கண்ணன் என்னும் திருவடிவம்

    காண்போர் மயங்கும் ஒரு வடிவம்

    அதுதான் கண்ணன் என்னும் திருவடிவம்//

    அருமை. அழகு. பாராட்டுக்கள். ;)

    ReplyDelete