Saturday, December 28, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)


பாடல் 17 

அம்பரமே தண்ணீரே சோறே அறம்  செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே 
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய் 
அறிவுறாய்அம்பறைமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே 
உறங்காது எழுந்திராய் செம்பொற்க் கழலடிச் செல்வா  
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்   

விளக்கம்
ஆடை,தண்ணீர்,உணவு  ஆகியவற்றை கொடையாக அளிக்கும் 
எம்பெருமான் கோபாலனின்  தந்தையே எழுந்திராய் 
ஆயர்குலவிளக்கான கண்ணனின் தாயே யசோதையே எழுந்திராய். 
மூவடியால் உலகையெல்லாம் அளந்த தேவர்களின் தலைவனே நீயும் உறக்கம் நீங்கி எழுந்திராய் 




செம்பொன்னால் ஆன கழலை அணிந்த பலராமனே 
நீயும் துயில் நீங்கி எழுந்திராய் என்று அனைவரையும் தன தோழிகளுடன் சென்று ஆண்டாள் எழுப்புகிறாள். 


அனைவருக்கும்
 தந்தை இறைவன் தான் 

அவன்தான் நமக்கு வேண்டிய உடை>உணவு>நீர் 
> அனைத்தையும் தருகிறான் 

உயிர்கள் வாழ உணவைத் தருபவள்
 பூமகளாகிய புவிமாதா 

நீரைத் தருபவனோ நீர்வண்ணனாகிய 
ஆழி மழைக் கண்ணன் 

அனைத்து உயிர்களுக்குள்ளும் 
ஆன்மாவாய் இருப்பவன் 
ஆத்ம ராமானாய்  இருப்பவன் 
ஆனந்தம் தருபவன் பரம்பொருளாகிய கண்ணனே. 

அவன் உறங்குவதுமில்லை
விழிப்பதுமில்லை

உறங்குவதும் விழிப்பதும் 
ஜீவர்களுக்குத்தான் 

கண்ணனையும் தங்களைப் 
போல்தான் உறங்குகிறான்> விழிக்கிறான் 
 என்று அறியாமையினால் ஜீவர்கள்  நினைக்கின்றனர். 

மூன்று உலகம் என்பது நம்முடைய
 மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கும்

ஒன்று நாம் விழித்திருந்து 
உலக செயல்களை செய்வதாக
 எண்ணும் நிலை.

இரண்டாவது உறங்கும்போது 
கனவு காணும் நிலை. 

மூன்றாவது கனவுகளற்ற ஏதும் 
அறியாது மயங்கிக் கிடக்கும் நிலை.

இதில் முதல் நிலையான்  
விழிப்புநிலையும் ஒரு நீண்ட 
கனவின் பார்ப்பட்டதே என்பதே உண்மை நிலை.

இந்த மூன்று நிலைகளுக்கு 
 அப்பால் ஒரு நிலை உள்ளது. 

அந்த நிலையில்தான்
 நம்முடைய ஆன்மா உள்ளது.

அதுதான் எப்போதும் உறங்காது 
விழித்திருந்து இந்த மூன்று நிலைகளையும்
 சாட்சியாக இருந்து காண்கிறது.

மனம் கூட விழிப்பு மற்றும் 
கனவு நிலைகளை கடந்து ஆழ்ந்த உறக்கத்தில் 
ஆன்மாவிடம் தான் தங்குகிறது 

அது ஆன்மாவிடம் உள்ளபோது
எந்த சலனமும் இல்லாது 
அமைதியாய் இருக்கிறது. 

அதை விட்டு வெளிவரும்போதுதான் 
விருப்பு வெறுப்புகளும்>காம க்ரோதாதி 
உணர்ச்சிகளும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன 

நம் மனம் ஆன்மாவிலேயே 
லயித்திருந்துவிட்டால். நாம் 
எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக் 
ஆனந்தமான மன நிலையில் இருக்கலாம். 

அதற்குதான் நாம் நமக்குள்
 அந்தர்யாமியாக விளங்கும் கண்ணனை>
 நம் இதயத்திற்குள் ஒளி வீசும் வாசுதேவனை
>பரப்ரம்மமாகிய ராமனை 
நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.



அதற்கு உறக்கத்தை> இந்த உலக 
பொருட்களின் மீதுள்ள மயக்கத்தை தாண்டி
 நாம் நமக்குள்ளே செல்லவேண்டும்.  

2 comments:

  1. ஆனந்தமான மன நிலையில் இருக்க வேண்டிய விளக்கமும் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. //உறக்கத்தை இந்த உலக பொருட்களின் மீதுள்ள மயக்கத்தை தாண்டி
    நாம் நமக்குள்ளே செல்லவேண்டும். //

    அழகான படங்கள். அற்புதமான விளக்கங்கள். நல்லதொரு முடிவுரை. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள் .... அண்ணா.

    ReplyDelete