Sunday, January 5, 2014

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(23)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(23)




பாடல்-23

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் 
சீரிய சிங்கம் அறிவுற்றுக் தீவிழித்து வேரி  மயிர் போங்க 
எப்பாடும் பேர்ந்துதறி மூரி நிமிர்ந்து  முழங்கிப் புறப்பட்டுப் 
போதருமாப் போலே 
 நீ பூவைப் பூவண்ணா 
உன் கோயில் நின்றிங்கனே போந்தருளிக் 
கோப்புடைய சீரிய சிங்காதனத்திலிருந்து 
யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோ ரெம்பாவாய் 

  

விளக்கம் 

மழைக்காலத்தில் மலைக்குகையில் 
ஒதுங்கி உண்ண உணவில்லாமல் மயக்கம் கொண்டு 
உறங்கும் சிங்கம் சீற்றத்துடன்  இருக்கும். 

வெளியில் சென்று வேட்டையாடினால்தான்
 உணவு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டு
 உறக்கத்தினால் சிவந்த கண்களை விழித்துக்கொண்டு தன் பிடரி மயிரை சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து  வீரத்துடன் எழுந்து 
உறுமிக்கொண்டு கர்ஜனை செய்து கொண்டு வெளிவருவதைப்போல நரசிங்கபெருமானாய் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்ற தூணிலிருந்து வெடித்து தோன்றி காப்பாற்றியதைப் போல நீ பூப் போன்ற திருமகளை மார்பில் சூடியவனே

 தாமரை மலர் நிறத்தை ஒத்த செவ்வாயை உடையவனே 

இது காறும்  உன்னை வணங்கவேண்டும் என்று கூட அறிவு கூட இல்லாமல் உலக மோகத்தில் மூழ்கி அறியாமையில் மயங்கிக் கிடக்கும் எங்களின்  மயக்கத்தைப் போக்க வேண்டி உன் கோயில் வாசலில் நிற்கின்றோம். 



நீ அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சிங்காதனத்தில் வந்தமர்ந்து கொண்டு நாங்கள் வந்த காரணத்தைக் கேட்டறிந்து அதில் எங்களுக்கு நன்மை பயக்கும் வரங்களை மட்டும் தந்து எங்களை காத்தருள்வாயாக என்று நம் சார்பாக ஆண்டாள் அரங்கனிடம் வேண்டுகிறாள். 

வள்ளலார் தனித்திரு
>பசித்திரு> விழித்திரு என்றார். 

இந்த உலகத்தோடு இருந்தாலும்
 நாம் நம்முடைய உள்முக சிந்தனை இறைவனை 
அடைவதற்காக தனித்திருக்கவேண்டும்.

 பசித்திரு என்றால் எப்போதும் 
இறைவனருள் கிடைக்கவேண்டும் என்ற 
 தீராத தாகத்தோடு இருக்கவேண்டும். 

விழித்திரு என்றால் இறைவனருள் 
எப்போது கிடைக்கும் எந்நேரத்தில் கிடைக்கும் எவர் மூலம் கிடைக்கும் என்பதை யாரும் அறிய முடியாது 

ஒரு போர் வீரன்போல் தன்னுடைய
 தலைவனின் கட்டளைக்கு அடிபணிய தயாராக இருப்பதைப் போல் இருக்க வேண்டும்.

 ஏனென்றால் இறைக்காட்சி மின்னல் 
போல் தோன்றி மறைந்து விடும் 

ஒருகணத்தில் தோன்றும் இறைக்காட்சி நம் பல கோடி பிறவிகளில் செய்த அனைத்து  வினைகளையும் பொசுக்கி நம்மை  பரிசுத்தமாக்கிவிடும். 

தெய்வீகமான இந்த மாதத்தில் 
நம்மையெல்லாம் கடைதேற்ற
 பகவான் கண்ணன் கோயிலில் காத்துக் கிடக்கின்றான்.

உண்மையாய் அவனையே எப்போதும் 
சிந்திப்பவர்களுக்கு அவரவர்
 உள்ளத்திலும் காத்துக் கிடக்கின்றான். 

இந்த அரியதோர் வாய்ப்பை விட்டு விடாமல்
 இந்த உடலில் உள்ள உயிர் உடலை விட்டு ஓடுவதற்குள் அவன் தாள்களை கெட்டியாக பற்றிக்கொள்ளுவோமாக 

3 comments:

  1. சிங்கம் குகயை விட்டு வருவது, அருகே பெருமாள் நடந்து வருவது
    சிம்மாசனத்தில் நரசிம்ஹன்,கீழே குழந்தை கிரிஷ்ணன்
    அற்புதம்..அருமை..தெய்வீகம் நன்றி

    ReplyDelete
  2. பசித்திரு, தனித்திரு, விழித்திரு - விளக்கம் அருமை ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகான படங்களுடன் அற்புதமான தரிஸனம் அண்ணா.

    ReplyDelete