Monday, January 20, 2014

பிரச்சினைகளில் சிக்கிகொள்ளாமல் வாழ்வது எப்படி?

பிரச்சினைகளில் 
சிக்கிகொள்ளாமல்  வாழ்வது எப்படி? 

அய்யா 
என் தலை சுற்றுகிறது 

அய்யா உங்கள்  தலை மேலே
மின்  விசிறிதான் சுற்றுகிறது

உங்கள் தலை உங்கள் கழுத்தின் மேல்
அப்படியேதான்  இருக்கிறது
எனக்கு ஒன்றும் சுற்றுவதாகத்
தெரியவில்லையே

என்ன உங்களுக்கு
கேலியாக உள்ளதா?
என் தலை சுற்றுகிறது.
என்ன செய்ய வேண்டும்
என்றே புரியவில்லை

மீண்டும் அதே பல்லவி
எத்தனை முறை
கேட்டாலும் அதே பதில்

சுற்றும் இவர் தலையை
நிறுத்த எந்த இடத்தில் பிரேக் போடுவது ?

வேறொன்றும் இல்லை.
இவர் மனதில் ஏதோ . பிரச்சினையை வைத்துக்கொண்டு
அதற்கு தீர்வு காண முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்றுநமக்கெல்லாம்  புரிகிறது

அது சரி உனக்கு
என்ன பிரச்சினை?


எதை சொல்றது
எதை விடுவது?

சரி ஒன்றொன்றாக சொல்லு
அதற்க்கு ஏதாவது
தீர்வு இருக்கிறதா பார்ப்போம்.

எதை முதலில் சொல்வது
எதை அடுத்ததாக சொல்வது?

அட என்னப்பா
சரியான குழப்பவாதியாக
இருக்கிறாயே?

எதோ உன்னிடம் சொன்னால்
நீ தீர்வு சொல்வாய் என்று பார்த்தால்
என்னைபோய் குழப்பவாதி என்கிறாயே?

உன்னிடம் ஒன்றும்
வேலைக்கு ஆகாது என்று
அவர் கிளம்பதொடங்கினார்.

இப்படிதான் இன்று உலகில்
பல கோடிபேர்கள்
தங்களை வாட்டும்
பிரச்சினைகள் என்ன என்றே 
தெரியாமல் குழம்பிகொண்டிருக்கிரார்கள்.


யாராவது அவர்களுக்கு
உதவி செய்ய முன் வந்தாலும்
அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை.

இதைப் போன்ற மனிதர்களின்
மனம்எப்போதும் குழப்பத்தில்
ஆழ்ந்து இருப்பதையே விரும்புகிறது.

அதிலிருந்து அவர்கள்
விடுபடவேண்டும் என்று
எப்போதாவது நினைத்தாலும் அது
அவர்களால் முடிவதில்லை.
அந்த அளவிற்கு
மன உறுதியற்றவர்கள் அவர்கள்

தொடர்ந்து அவர்கள் இப்படியே இருந்தால்
அவர்களை சுற்றியுள்ள இந்த கொடூரமான
உலகம் அவரை ஒதுக்கி விடுவது
மட்டுமல்லாமல் அவர்களை நிரந்தர
மன நோயாளிகளாக ஆக்கிவிடும்.

இதனால் அவர்களின்  வாழ்க்கை
பாழாவது மட்டுமல்லாமல் அவர்களை
சுற்றியுள்ளவர்களும்
படும் பாடு சொல்லி முடியாது

அதனால் அவர்களின் வாழ்வும்
மற்றவர்களின்  மன அமைதியும்
கெடுகிறது.

இவர்களை யார் திருத்துவது?

அதற்குத்தான் மகான்கள் 
பல வழிகளைக் காட்டியுள்ளார்கள் 

அதில் மிக எளிதான வழி எல்லாவற்றையும் 
இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு 
நாம் நம் கடமைகளை செய்து 
கொண்டு போவதுதான் என்பதே 

எப்படி என்றால் ஒரு வண்டியில் நாம் பயணம் செய்யும்போது
நாம் நம் தலையில் சுமந்து வந்த மூட்டையை




தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு 






வண்டியில் பயணம் செய்வதுபோல் என்று 
கூறுவதை புரிந்து கொண்டால் 
நம் தலை என்றும் சுற்றாது.



இந்த பூமி சுற்றினாலும் 



அதை நாம் உணராது நம்மை வைத்திருக்கும்
பகவான் நம்மை வாட்டும் பிரச்சினைகளும் 
நம்மை வாட்டாது காப்பாற்றுவான் 
என்பதை உணரவேண்டும். 

4 comments:

  1. பயண விளக்க ஒப்பீடு அருமை ஐயா...

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள். பிரச்சனைகளுக்கு சுலபமான வழி.

    //எப்படி என்றால் ஒரு வண்டியில் நாம் பயணம் செய்யும்போது
    நாம் நம் தலையில் சுமந்து வந்த மூட்டையை தலையிலிருந்து இறக்கி வைத்துவிட்டு .....//

    உதாரணம் சூப்பர் ! ;)

    ReplyDelete
    Replies
    1. comment சூப்பர் 'O' சூப்பர் VGK

      Delete