Friday, April 25, 2014

ஓடும் எண்ணங்களே ஒரு சொல் கேளாயோ ?

ஓடும் எண்ணங்களே

ஒரு சொல் கேளாயோ ?





வண்ணங்களைக் கண்டு
மயங்காதே

வண்டுகள் போல் தேனின் சுவைக்கு
ஆட்பட்டு  வீணே மாய்ந்து போகாதே

ஓடி ஓடி உழைத்து பொருளை
தேடி அடைந்தாலும் அது
உனதல்ல உனதல்ல

நீ உழைத்துத் தேடிய பொருளை
உழைக்க இயலாத ஜீவன்களுக்கு
வழங்கிவிடு உள்ளத்தில் இன்பம் அடைந்திடு

நீ தேடவேண்டிய பொருள்
பரம்பொருள் மட்டுமே

அதற்காக நீ இவ்வுலகெங்கும் தேடித்
திரியவேண்டாம். உன்னுள்ளேயே
பத்திரமாக இருக்கிறது உன்
வருகைக்காக வேண்டி.

வேண்டி பெறுவாய் அதை
ஒருமையான சிந்தையுடன்

புலன்களின் வழியே செல்லாதே
யார் மீதும் புறங்கூராதே

ஒன்றே மூலப்பொருள்
அதுவே அண்டம் அனைத்துமாய்
பரந்து விரிந்துள்ளது
பெயர்களும் வடிவங்களுமாய்

அதை அறிந்து இன்புறுவாய்
பெயர்களும் வடிவங்களையும்
மறந்து .

அந்த மூலம்தான் ராம நாமம்
அதைப் பற்றிக் கொள்வாய்

உன்னைப் பற்றிக்கொண்டு அல்லும் பகலும்
துன்புறுத்தும் பற்றுகள் அற்றுப் போகும்.

இன்ப துன்பம் கடந்த ஆனந்த   வாழ்வும்
நிலையான் அமைதியும் இப்பிறவியிலேயே
அடைவாய்.  

6 comments:

  1. நீ தேடவேண்டிய பொருள்
    பரம்பொருள் மட்டுமே


    ஆழ்ந்த சிந்தனை..!

    ReplyDelete
    Replies
    1. ஆழ்வார்களும் நாயன்மார்களும், பக்தர்களும் கண்டு கொண்டார்கள். பிறவிக்கடலைக் கடந்தார்கள்.

      என்னைப் போன்றவர்கள் வெறுமனே அவர்களைப்பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறோம். விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

      என்று முழுமையாக முயற்சி செய்யப்போகிறோம்?

      Delete
  2. /// வேண்டி பெறுவாய் அதை
    ஒருமையான சிந்தையுடன் ///

    அருமை ஐயா... எதையும் சாதிக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. சாதிக்க வேண்டுமென்றால் சாதிகளைக் கடக்க வேண்டும்

      சொல்லம்புகளும் வில்லம்புகளும்
      சாதிக்க இயலாததை நல்லன்பு சாதித்துவிடும்

      Delete
  3. ஆழமான கருத்துக்கள் உட்பொதிந்த - இனிய கவிதை..

    ReplyDelete