Wednesday, December 31, 2014

வருக வருகவே 2015

வருக வருகவே 2015


அரங்கனோடு இணைந்து
அகிலத்தைக் காக்கும் அன்னையே

அலர்மேல் மங்கையே அடியேனின்
கோரிக்கையை சற்றே செவி மடுப்பாய்

அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்
அரக்கர்களின் மனதில் அன்பு பயிரை
துளிர் விடச் செய்வாய்

உன் வடிவாய் உலகில் பவனி வரும்
பெண்ணினத்தை இழிவு செய்யும்
மூடர்களின் மனதை மாற்றிடுவாய்

கோயிலுக்குள்ளே உன் வடிவை தெய்வமெனக்
கும்பிட்டு சுக போகங்களை வரமாகக்
கேட்கிறார் ,வெளியே வந்த பின் மனம் மாறி
குணம் மாறி மாதர்தம்மை ஏசுகிறார். இந்த
மாந்தர்

உன் மதம் என் மதம் என்று உண்மை நிலை
புரியாது வாதம் செய்து உலகத்து மக்களுக்கு
ஓயாது துன்பம் தருகின்றார். ஒவ்வொருவரும்.







அல்லல் தரும் அரக்கர் கூட்டத்தைகொல்ல

அம்பெடுத்த ராம பிரானை அடையும் வழி அவன்
நாமம் மட்டுமே என்பதை அறியும் அறிவை
அவனியில் உள்ள மக்களுக்கு புகட்ட
வந்தாய் ஆண்டாளாக




ஆண்டுதோறும் அவள் அருளிய பாடல்களை
இசைக்கின்றோம்.மார்கழி மாதம் முழுவதும்
ஆனால் ஆண்டின் மற்ற மாதங்கள் முழுவதும்
வசை பாடியே கழிக்கின்றோம்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை நினையாது
பிறர் மீது வரைமுறை இல்லாமல் குறை கண்டே
வாழ்வைத் தொலைக்கின்றோம்



இனியாவது மனித மனம் திருந்தத்ட்டும் .
திருவேங்கடமுடையானின்
திருவடிகளை நாடட்டும். நானிலத்தில்
நல்வாழ்வு பெற்றுஇன்பமுடன் வாழட்டும்.



2 comments:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete