Wednesday, December 31, 2014

இறைவன் நம்முள் இருக்கின்றான்.

இறைவன் நம்முள் இருக்கின்றான்.

இறைவன் நம்முள் இருக்கின்றான்.
அவனருளால்தான் அவன் ஏற்றுள்ள
வெவ்வேறு வடிவங்களை
புறத்தே காண்கின்றோம்.






அவன் இருப்பதை தங்கள் இதயத்தில்

உணராத நாத்திகர்களுக்கு   அவன் வடிவங்கள்
கல்லாகவும் மண்ணாகவும்தான் தோற்றமளிக்கின்றன

அவன் இருக்கின்றான் என்று நம்புவருக்கும்
இல்லை என்று பிதற்றுபவர்களுக்கும்
இறைவன் பார பட்சம் காட்டுவதில்லை

இருவர் இதயத்திலும் ஆன்மாவாய்
இருந்துகொண்டு மூச்சுக் காற்றாய் வந்து
போய்க்கொண்டிருக்கின்றான்

மூச்சில்லாவிட்டால் பேச்சில்லை
ஜீவனாகிய நாம்ஒவ்வொரு பிறவியிலும்
தங்கியிருக்கும் உடல் பஞ்ச பூதங்களின்
கூட்டால் உருவானது

நிலம், நீர் , நெருப்பு, காற்று ஆகாயம்
ஆகிய பூதங்களைக்  கொண்டு
உருவாக்கப்பட்ட இந்த உடல் இயங்க
காற்று முக்கிய பங்குவகிக்கிறது

காற்று ஓரிடத்தில் நிற்பதில்லை
அது ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது
அதன் இயக்கம் நின்றுவிட்டால் அனைத்தும்
நின்றுவிடும்.

அதன் வேகம் ஒவ்வொரு உயிருக்கும்
இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட  அளவில்
இந்த உடலின் உள்ளே
வந்து போய்க்கொண்டிருக்கிறது

உயிர்களில் உள்ள இதயத்தில் உண்டாகும் துடிப்பு
அதை உணர்த்துகிறது. அது அதன் பணியை செவ்வனே
செய்தாலும் அதை பாதிக்கூடிய பாதக செயலை
செய்வது நமுடைய மனதில் தோன்றும்
உணர்ச்சிகள் .

காமம், குரோதம், லோபம், மோஹம் ,மதம், மாச்சர்யம்
என்ற உணர்ச்சிகள் .கட்டுப்பாடின்றி போனால் அது
இதயத்தைப் பாதித்து உயிர்களை
மரணத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது.

இந்த ஆறு குணங்களை கட்டுபடுத்தி நமக்கு
பயன்படுவகையில் நன்மை அளிக்கவேண்டுமென்றால்
அவைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
இறைவனை நாம் சரணடையவேண்டும்

நாம் செய்யும் செயல்களுக்கு நாம் தான் பொறுப்பு
என்ற அகந்தையை விடவேண்டும்.

அனைத்தும் இறைவன்தான் நம்மை கருவியாகக் கொண்டு
செய்விக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

எப்போதும் அவன் நாமம் நாவில் கொண்டால்
சாவிலிருந்து தப்பிக்கலாம்

அவன் வடிவை நெஞ்சத்தில் நினைத்தால்
வஞ்சக எண்ணங்கள் நம் மனதில் தோன்றாமல்
தப்பிக்கலாம். 

அன்பே வடிவமானஅவனை நினைத்தால்தான்
அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்கள்  மீது நாம்
அன்பு செலுத்த முடியும்.

அவனை நினைக்காவிடில் நம்முடைய அன்பு
ஒரு வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு நம்மை
பாச வலையில் தள்ளிவிடும்


பற்றில்லாத அவனின் பாதங்களை பற்றுக்கோடாக
பற்றிக்கொண்டல்தான் நாம் பற்றிக்கொண்ட
பற்றுக்களிலிருந்து விடுபடமுடியும்.

அப்போது நம் மூச்சு சீராக இருக்கும்
பேச்சும்  நேராக இருக்கும்
இகமும் பரமும் இன்பமாய் இருக்கும்

2 comments:

  1. ரயிலின் முகப்பில் குட்டிக் கிருஷ்ணன். அருமை.

    நமஸ்காரங்களுடன் உங்களுக்கும் சக வலையுலக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete