Thursday, April 25, 2013
தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(24)
தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள்(24)
மனமே!நீ மகிழ்ச்சியுடன்
இராததேன்?
மனமே !
அகிலாண்டகோடி
பிரம்மாண்ட நாயகனாகிய
ஸ்ரீமான் நாராயணன்
உன் உள்ளத்தில்
குடி கொண்டிருக்கையில்
உனக்கு வேண்டுவது வேறென்ன?
நீ மகிழ்ச்சியுடன் இராததேன்?
முற்பிறப்புக்களில் செய்த
பாவக் கூட்டமாகிய காட்டையழிக்க
நந்தகமென்னும் வாளைஏந்தி
ஆனந்தம் தருபவனாகிய
சீதாபதி இருக்கையில் ,
காமம், லோபம் ,மோகம் ,மதம்
இவற்றின் சேர்கையாகிய
இருட்டைப் போக்குவதற்கு
சூரிய சந்திரர்களை கண்களாகவுடைய
ஸ்ரீ. ராமச்சந்திரமூர்த்தி
உன் உள்ளத்தில் வசிக்கையில் சேமம்,சுபம் ஆகியவற்றையும் தியாகராஜா கோரும் மற்ற விருப்பங்களையும் நியமத்துடன் வழங்கும் தயாநிதியாகிய இராமபத்ரன் உன்னிடமே விளங்கும்போது நீ வேண்டுவது வேறென்ன?
(கீர்த்தனை-இக காவலஸிந-( 273)-ராகம் -பலஹம்ச - தாளம் -ஆதி )-
மனித மனதின் இயல்பு என்னவென்றால் எப்போதும்
இருப்பதை கொண்டு இன்புறுவதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றை நினைந்து வேதனைப்படுவதுதான்
நம்முடைய எல்லாவிதமான விருப்பங்களையும் நிறைவேற்றவும், நம்மை துன்பத்தில் ஆழ்த்தும் வினைகளை அழிக்கவும், நம் உள்ளத்திலேயே ஸ்ரீமான் நாராயணனும், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் வசிக்கையிலெ மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
ஆனால் அதை உணராது ஏன் சோகத்தோடு காணப்படுகிறாய்
என்று தன் மனதை கேட்கிறார் ஸ்வாமிகள்
.
அவர் மனம் மட்டும்தானா அப்படி இருக்கிறது
நம்முடைய மனமும் அந்த நிலையில்தான் இருக்கிறது.
இனியாவது நம் மனதின் போக்கை நாம் மாற்றிக்கொண்டு பிலாக்கணம் பாடாமல் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணத்தை கற்றுக்கொள்வோம்.
உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் ஐயா...