Monday, April 29, 2013
தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (30)
தியாகராஜ சுவாமிகளின்
சிந்தனைகள் (30)
மனதிற்கு உபதேசம்
மனமே!
ராமநாமத்தை
சதா பஜனை செய்வாயாக!
அவன் அளவற்ற
நன்மைகளுக்கு சுரங்கம் போன்றவன்
பாவங்களென்னும் இருளை
அகற்றும் சூரியன்
நூறு தலை ராவணனால்
வணங்கபெற்ற சிவனால்
போற்றப்படுபவன்
தஞ்சமடைந்தோருக்கு
கற்பகதரு
உலகோரை காப்பவன்
கபாலியான சிவனால்
துதிக்கபெரும் குணசீலன்
உந்திக்கமலத்தோன்
காலனையும் முப்புரங்களையும்
வென்ற சிவனுக்கு பாக்கியமானவன்
பிரம்மானந்தம் தருபவன்
தேவராலும் முனிவராலும்
வணங்கப் பெறுபவன்
வடிவழகன்
தீரன்
இத்தியாகராஜனின் ஜீவாதாரம்
வில்லையும்
கணைகளையும் ஏந்தியவன்
நற்குணங்கள் நிரம்பியவன்
சம்சார கடலை
கடக்க உதவும் நாவாய்
பிரம்மன் முதலியோருக்கு தந்தை
அனுமனின் நண்பன்
சிறப்புற்ற சீதையின் நாதன்
சந்திரசூரியரைக்
கண்களாக உடையவன்
தியாகராஜரின் பரம மித்திரன்
(கீர்த்தனை-பஜ ராமம்-சததம்(521)-ராகம்- ஹுசேனி -தாளம்-ஆதி)-
இராமபிரானின் அருமைகளையும்,
பெருமைகளையும் விவரித்து
அவன் நாமத்தை பஜனை செய்யுமாறு
மீண்டும் மனதிற்கு ஸ்வாமிகள்
நமக்கும் சேர்த்துதான்
உபதேசம் செய்கிறார்
இந்த கீர்த்தனையில்.
இடைவிடாது நம்பிக்கையுடன்
இராம நாமம் சொல்வோம்.
இகபர சுகம் அடைவோம். எளிதாக
//இடைவிடாது நம்பிக்கையுடன்
ReplyDeleteஇராம நாமம் சொல்வோம்.
இகபர சுகம் அடைவோம். எளிதாக//
அருமையான வழியை வெகு சுலபமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.
ராம் ராம் ராம ராம ராம் ராம ராம ராம ராம
நாம் எதுவும் கேட்காமலேயே
Deleteநன்மையையும் செல்வமும்
நாளும் நல்குவது ராம நாமம்
திண்மையும் பாவமும் சிதைந்து தேயும்
நம்மை அறியாமலேயே
ஜன்மமும் மரணமும்
இன்றி தீரும் முடிவிலே
இவையெல்லாம் யாருக்கு
இடைவிடாது ராம நாமம்
ஜபிப்பவருக்கு மட்டும்தான்
மோரும் சாதத்திற்கு
ஊறுகாய் தொட்டுக்கொள்பவர்களுக்கு அல்ல
மற்றவர்களுக்கு அவர் ஜெபிக்கும்
கணக்கிற்கு ஏற்ப கணக்குபண்ணி
நன்மைகள் வழங்கப்படும்.