காண்பதெல்லாம் கண்ணனே
விண்ணில் எங்கோ
மறைந்து கிடந்தவன்
விண்ணோர்
தலைவனாய் விளங்குபவன்
வேத மறைகளுக்கும்
எட்டாப் பொருளானவன்
ஒருகணமும் அவனை
மறவாது நினைத்து
துதிக்கும் அடியார்களின்
உள்ளத்தில் உறைபவன்
பக்தரின் கண்களுக்கு
புலப்படும் விதமாய்
கண்ணனாய் ஆகி
களிப்பூட்டியவன்
காதலால் கசிந்துருகிய
கோதையின்
வடிவிலே
கலந்துவிட்டவன்.
மாலன், மாயவன்,மணிவண்ணன் ,
நேயன்,நிமலன்,நிர்க்குண பிரம்மன்
,நீர்வண்ணன்,நெடுமால்,
அடியவர்களின் ஆதாரம்
சோதிவடிவானவன்,
கண்ணனை பணிவோம்.
ஊனிலும்உயிரிலும்
கலந்து விட்ட அவனை
உள்ளுணர்வால்
உணர்ந்து தெளிவோம்.
அருமை ஐயா...
ReplyDeleteபடத்தில் தங்களின் கைவண்ணம் தானே...?
வாழ்த்துக்கள்...
ஆம் இவனின் கைவண்ணம்தான்
Deleteநன்றி DD
கண்ணன் அழகு. கண்ணனைப்போன்ற இந்தப்பதிவும் அழகோ அழகு. பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றி V(ery)G(ood)K(nowledgeble)
Delete