Friday, January 18, 2013
இறைவா உன்னை எல்லோரும் தேடுகிறார்கள்
இறைவா உன்னை
எல்லோரும் தேடுகிறார்கள்
நீ எங்கேயோ இருப்பதைப்போல
நீ கண்ணுக்கு தெரியாமல்
மறைந்துகொண்டதைபோல
நீ காணாமல் போய்விட்டதைப்போல
உண்மையில் நீ எதிரிலேயே இருக்கின்றாய்
உன்னை எதற்கு தேடவேண்டும்?
நீ கண்ணுக்கு தெரியாமல் மறைந்தால் அல்லவோ
உன்னை தேடுவதற்கு
நீ ஏற்கெனவே கண்ணெதிரில் இருந்து
தற்போது காணாமல் போய்விட்டால்
அல்லவோ உன்னை தேடுவதற்கு.
நான் கண்ணை மூடிக்கொண்டால்
இருட்டாக தெரிகிறாய்
கண்ணை திறந்து பார்த்தாலோ
ஒளியாக தெரிகிறாய்
நீதானே அனைத்துமாக இருக்கிறாய்
அந்த ஒளியில் தோன்றும் அனைத்துமே
உன் வடிவங்கள்தாமே
உறங்க சென்றால் கனவுகளிலும்
நீதான் தோற்றமளிக்கிறாய்
என்னுள்ளிருந்தும் மற்ற உயிர்களிலுள்ளும்
வாசம் செய்துகொண்டு இயங்க செய்கிறாய்
நீ ஒன்றாகவும் இருக்கிறாய்
பலவாகவும் இருக்கிறாய்
ஒளியாகவும் இருக்கிறாய்
ஒலியாகவும் இருக்கிறாய்
என்னை விட்டு பிரியாமல் என்னோடு இருக்கின்ற
உன்னை நான் எதற்க்காக தேடவேண்டும்.
நீ இருப்பதை உணர்ந்துகொண்டாலே போதும்
உன் லீலைகளை ரசித்தபடி வாழுவதை விட்டு
கணத்திற்கு கணம் மாறும் மனம் போகும்
பாதையெல்லாம் சென்று
துன்பப் படுவது அறியாமையன்றோ?
Beautiful thoughts
ReplyDeleteThank you
Deleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteநீ இருப்பதை உணர்ந்துகொண்டாலே போதும்..
ReplyDeleteஉண்மையை சிறப்பாக உரைத்த அருமையான பகிர்வுகள்..
வாழ்த்துகள்..
வருகைக்கும் தங்கள் மேலான கருத்துக்களுக்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி.
Delete