Monday, April 15, 2013
ராமாயணம்-பகுதி-4
ராமாயணம்-பகுதி-4
சீதை யார்?
சீதை ஜீவாத்மா
அது இறைவனை
(ராமனை) அடைகிறது
இறைவனோடு இருந்தாலும்
ஆத்ம ஞானம் இல்லாவிடில்
இறைவனுடன் இருந்தும் சம்சார
தொல்லைகளிலிருந்து விடுபடமுடியாது.
இந்த நிலை மனிதர்களுக்கு
மட்டுமல்ல இந்த அறியாமை
தெய்வங்களுக்கும் ,
தேவர்களுக்கும் ,
சக்தி வாய்ந்த அசுரர்களுக்கும்
பொருந்தும்.
எப்படி என்றால் ந்ம்மை
எல்லாம் படைக்கும் சக்தியை
பெற்ற பிரம்ம தேவர் தான்தான்
எல்லாவற்றையும் செய்கிறேன்
என்று அகந்தை கொண்டார்.
அந்த அகந்தையினால்
தன்னை படைத்த
நாராயணனையே
அவர் மறந்து போனார்.
இந்த மறதியினால் அவர் துன்பத்தில்
சிக்கிகொள்வதும் அதிலிருந்து
அவரை விடுவிப்பதும்
நாராயணின் வேலையாக போயிற்று.
அதுதான் அவன் லீலை.
இது போன்ற லீலைகள் மூலம்
அவன் படைப்புகள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
அதற்காகத்தான். அவன் அப்படி செய்கிறான்.
மும்மூர்த்திகளில் மாலவனும்
சிவபெருமானும் எப்போதும் ஒரு கட்சி.
எந்த பிரச்சினையானாலும் இருவரும்
ஒருவரை ஒருவர் அனுசரித்து செயல்படுவார்கள்.
அப்படி பரஸ்பர அன்பு இருவரிடம்.
உண்மையான அன்பு இருக்கும்
இடத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஆனால் அவர்களை வணங்குபவர்கள்தான் அறியாமையினால்ஒருவொருக்கொருவர்
அடித்துகொள்கிறார்கள்.
பிரம்மதேவர் எப்போதும் தான் உண்டு
தன் வேலை உண்டு என்று தனியாக செயல்படுவார்.
இப்படி இருந்த பிரம்மனுக்கு
மீண்டும் அகந்தை தலைக்கேறியது.
மும்மூர்த்திகளில் தான்தான் உயர்ந்தவன்
என்றும் தான் படைக்கும் தொழிலை
செய்யாவிட்டால் மாலுக்கும்
சிவனுக்கும் ஏது வேலை?
தான் உயிர்களை படைத்தால் அல்லவோ
திருமால் விதி முடியும்வரை
அவர்களை காப்பாற்ற முடியும்.
சிவன் விதி முடிந்ததும்
அவர்களை அழிக்கமுடியும்.
என்ற அகந்தைதான் அது.
மனிதர்களுக்கு அகந்தை வரலாம்.
அதனால் ஏற்படும்
துன்பம் ஒரு எல்லைக்குட்பட்டது .
ஆனால் தெய்வங்களுக்கு
அகந்தை வரலாமோ?
எனவே இந்த குறைபாட்டை
சரி செய்ய சிவனும்,மாலும் சேர்ந்து
பிரம்மனுக்கு தெரியாமல்
ஒரு திட்டம் தீட்டினர்
அது என்ன திட்டம்?
(இன்னும் வரும்)
திட்டத்தை அறிய தொடர்கிறேன்...
ReplyDelete