Sunday, April 21, 2013
ராமாயணம்-பகுதி-5
ராமாயணம்-பகுதி-5
பிரம்மனுக்கு பாடம் புகட்ட
திட்டம் தீட்டினர்
மாலவனும் சிவனும்.
பிரம்மனின் மனதில் அகந்தை தீ
பற்றி கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருந்தது.
அதற்கு அறுவை சிகிச்சை
செய்வதற்காக மாலவன்
பிரம்ம லோகம் சென்றார்.
பிரம்மன் வாருங்கள் உட்காருங்கள்
என் தகுதியை தெரிந்துகொண்டபின்
நீங்களே என்னை பார்க்க வந்துவிட்டீர்கள் என்றான்
அது சரி சிவன் எங்கே
என்று பிரம்மன் கேட்டார்
என்னை கேட்டால்
எனக்கென்ன தெரியும்.
வேண்டுமென்றால் நீங்களே அவரை
அழைத்து பேசுங்கள் என்றால் மாலவன்.
அவ்வளவு அகந்தையா அவருக்கு என்றான்
ஏற்கெனவே தறுதலையாய் நடந்துகொண்டதால்
அவர் கையால் ஒரு தலையை
இழந்ததை மறந்த பிரம்மன்
சரி பிரச்சினையை வளரவிட வேண்டாம்
என்று கருதிய சிவ பெருமான் இருவர்
எதிரேயும் ஒரு ஜோதி வடிவில் நின்றார்
அந்த ஜோதியின் தொடக்கமும் தெரியவில்லை
முடிவும் தெரியவில்லை
பிரம்மன் என்ன இது .?இந்த ஜோதி யார்
என்று மாலவனை வினவினான்
ஏற்கெனவே சிவனுடன் போட்ட திட்டத்தை
செயல்படுத்த துவங்கினார் மாலவன்
பிரம்மா நீ அன்ன பறவை உருவெடுத்து
மேற்பக்கம் சென்று தேடு
நான் வராக உருவெடுத்து பூமிக்குள்
குடைந்து சென்று தேடுகிறேன் என்றான்.
இவர்களின் திட்டத்தை அறியாத பிரம்மன்
அன்னபறவை வடிவெடுத்து பறந்து மேலே
செல்ல தொடங்கினார்.
மாலவனோ பூமியை குடைவதுபோல்
உள்ளே சென்று பாற்கடலில் சென்று
அறிதுயில் கொள்ள சென்று விட்டார்.
பிரம்மன் மேலே செல்ல அந்த ஒளி பிழம்பு
வளர்ந்து கொண்டே சென்றதால்
பிரம்மன் களைத்துப்போனான்
இதை கண்ட சிவபெருமான் பிரம்மனுக்கு
உதவ மனம் கொண்டான்
தன் தலையில் இருந்த ஒரு தாழம் பூவினை
கீழே தள்ளினான். அதை கண்டதும் பிரம்மன்
அகந்தை நீங்கி உண்மையை உணர்ந்து கொள்ளட்டும்
என்று கருதினான்
ஆனால் பிரம்மனோ தன் தோல்வியை
ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தாழம்பூவை
தான் சிவபெருமானை கண்டதாக மாலவனிடம்
பொய் உரைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
படைத்தவனே கேட்கும்போது
போது மறுக்க இயலாமல் தாழம்
பூ மாலவனிடம் பிரம்மன் சிவனை
கண்டதாக பொய் உரைத்தது.
அறிவுக்கடலாகிய வாணிதேவி
தன் நாவிலிருந்தும் அகந்தையினால்
சிவபெருமானின் சாபத்திர்க்காளாகி
உலகில் தன் படைப்புகளினால்
கோயில் கொண்டு
வணங்கும் தகுதி இழந்தான்
அவனோடு பொய் உரைத்த தாழம்பூவும்
இறைவனை அலங்கரிக்கும்
பாக்கியத்தை இழந்தது.
இந்த நிகழ்விலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது
என்னவென்றால் அகந்தை கொண்டால்
அறிவிருந்தும் நாம் பழிக்கு ஆளாவோம்
என்பதுதான் அது.
ஆம் அகந்தை ஆகாதுதான்
ReplyDeleteவருகைக்கும்
Deleteகருத்துகளுக்கும் நன்றி.
உண்மை... பணிவு என்றும் வேண்டும்... உயர உயர அதிகம் அதிகம் பணிவு வேண்டும்...
ReplyDeleteபணிவு இல்லாவிடில்
Deletedoom தான்