ராம நாம சுகம்
ராம நாமத்தின் மூலம்
சுகம் அனுபவிக்கும்
பாக்கியசாலி யாரோ?
அம்மகிழ்ச்சியினால்
பொலிவுற்ற முகத்தவர் யாரோ?
அனைத்திற்கும் சாரமாகிய
தாரக மந்திரத்தினால் சுகிக்கும்
அந்த பாக்கியசாகி யாரோ?
சத்தியம் தவறாமல்
உலகமனைத்திற்கும் தாசனாகி
தெய்வ வேறுபாடின்றி ,
என்றும் அழிவில்லாத
சூஸ்வரமான கானத்துடன்
,நிரந்தரமாக தியாகராஜன்
துதிக்கும் ராம நாமத்தினால்
சுகிப்பவர் யாரோ?
கீர்த்தனை -ஸுகி யெவரொ (157)-ராகம்-காநட-தாளம்-தே -சாதி )
ராம நாமத்தை பக்தியோடு
ஜபிப்பவர்களுக்கு
அதன் சுகம் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரிய
வாய்ப்பில்லை
விளக்கத்திற்கு நன்றி ஐயா...
ReplyDelete