ramarasam

Wednesday, September 26, 2018

யாருக்காக யார் சாவது ?





யாருக்காக யார் சாவது ?

இராமன் என்பவர் இறந்து விட்டார். 
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் 
அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் 
ஒருவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் 
மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும்
 என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? 
நான் என்ன செய்வேன்?

அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி 
சமாதானப் படுத்த முயன்றார் 
ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,
இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.
ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் யாரும் முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” 
ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் 
என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்”

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”
அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.
நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? 
அவனுக்காக நான் வாழ வேண்டும்”
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”
குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் 
”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?
அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது
. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும்
 ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 
அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது.
 எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .

 இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் 
என்பது அவன் எடுக்கும் முடிவு.

நாம் யார் அதைக் குறை சொல்ல?
 கேள்வி கேட்க?“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,
அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய்,
 அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை.
 அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”

”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்
”“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”.

K.N.RAMESH <knramesh@gmail.com>

kankaatchi.blogspot.com at 6:50 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

kankaatchi.blogspot.com
View my complete profile
Powered by Blogger.