ramarasam

Saturday, November 24, 2018

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார் (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...

இசையும் நானும் (335)-திரைப்படம்-அசோக்குமார்   (1941) பாடல்-பூமியில் மானிட ஜென்மம் அடைந்து...




MOUTHORGAN VEDIO-335 

பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..ஓஊ...
பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்
புண்ணியம் இன்றி விலங்குகள் போல்..
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே 


காமமும் கோபமும் உள்ளம்  நிரம்பவே 
காலமும் செல்லமடிந்திடமோ
காலமும் செல்லமடிந்திடமோ

உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் ...ஓஊ....
உத்தம மானிடராய் பெரும் புண்ணிய
நல்வினையால் உலகில் பிறந்தோம் 
சத்திய ஞான  தயாநிதியாகிய சத்திய ஞான  தயாநிதியாகிய 
புத்தரை  போற்றுதல் நம் கடனே
புத்தரை  போற்றுதல் நம் கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதேஉண்மையும் ஆருயிர் அன்பும் அகிம்சையும்
இல்லையெனில் இந்  நர  ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமேமண்மீதிலோர் சுமையே - பொதிதாங்கிய
பாழ்மரமே- வெறும் பாமரமே

திரைப்படம்:  அசோக்குமார்
பாடல்:  பூமியில்மாநிடஜன்மம்
பாடகர்கள்:  MK. த்யாகராஜ பாகவதர்
இசை:  பழையது
பாடல் ஆசிரியர்:  பாபநாசம் சிவன் 
77 ஆண்டுகளாகியும் இன்னும் முந்தய தலைமுறையின் நினைவில் நிற்கும் பாடல். 




Posted by kankaatchi.blogspot.com at 5:18 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, November 11, 2018

இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....


இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964) பாடல்-தேவியர் இருவர் முருகனுக்கு....



இசையும் நானும் (332)-திரைப்படம்-கலைக்கோயில் (1964)


பாடல்-

தேவியர் இருவர் முருகனுக்கு...


MOUTHORGAN VEDIO(332)


Movie: 

கலைக்கோயில் (1964)

Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singer(s):பி.சுசீலா 
Lyricist: கண்ணதாசன்
தேவியர் இருவர் முருகனுக்கு 
திருமால் அழகன் முருகனுக்கு 
ஏனடி தோழி அறிவாயோ 
எனக்கோர் இடம் நீ தருவாயோ [தேவியர்]

கலைகளிலே  அவன் மறைந்திருந்தான் 
கை  விரலில் அவன் பிறந்து வந்தான் 
இதயத்தை மெல்ல மெல்ல மீட்டி விட்டான் 
என்னோடு தன்னை அவன் இணைத்துவிட்டான் [தேவியர்]

ஒரு முகம்  அவனை உணர்ந்ததடி 
இருமுகம் ஒன்றாய் கலந்ததடி 
அறிமுகம் சுவையாய் முடிந்ததடி 
அந்நேரம் தன்னை மனம் மறந்ததடி [தேவியர்]



Posted by kankaatchi.blogspot.com at 2:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 17, 2018

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.


ஆங்கிலத்திலே ஒரு பழமொழி ஒன்று உண்டு.
அது" Jack of all trades but master of none" 

அதுபோல் எனக்கும் எல்லாவற்றின் மீதும் ஒரு 
ஈர்ப்பு உண்டு. 

ஆனால் ஒன்று எனக்கு பிடித்துவிட்டால் அதை 
எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாய் 
முயற்சி செய்து அதை நிறைவேற்றிக்கொண்டு விடுவேன். 

அதில் ஓவியம் வரைவது எனக்கு பிடித்த ஒன்று. 
1973 ஆம் ஆண்டு என் நண்பன் ஒருவன் பென்சிலால் 
வரையப்பட்ட நாகேஷின்  முகத்தை காண்பித்தான். 
அப்படியே அது கருப்பு வெள்ளை புகைப்படம் போல் இருந்தது. 

அதை பார்த்தவுடன் நாமும் அதை முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது. 

அதனால் அவ்வப்போது பென்சிலால் படங்கள் வரைந்து அதை 
மெருகேற்றுவதில் தனி ஆனந்தம் .

இன்று பென்சிலால் முப்பரிமாண படங்களை வரைந்து  உலகெங்கும் ஓவியர்கள் கலக்குகிறார்கள். 

அதையும் ஒரு நாள் தொட்டுவிடுவேன். என்னுள்ளே இருக்கும் jack அதற்க்கு அனுமதிக்கவேண்டும். 

மயில்கள் எனக்கு மிகவும் பிடித்த பறவைகள். அதுவும் அது கூவும் அழகே அழகு. அதை அடிக்கடி கேட்டு பார்த்து ரசிப்பேன். அதன் அசைவுகள். ஆட்டம் பார்வை எல்லாமே அழகோ அழகு. 

அந்த பென்சில் ஓவியம் இதோ. 


Posted by kankaatchi.blogspot.com at 7:26 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, October 14, 2018

நானும் ஒரு ஓவியன் தான்



நானும் ஒரு ஓவியன் தான்


இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு  திரு ஸ்ரீராம் மட்டும் கருத்து  தெரிவித்திருந்தார். 

அதற்குப் பிறகு உடல்நிலை சரியில்லாமையால் படம் வரைவதை நிறுத்திவிட்டேன். (இப்போது மட்டும் யார் கேட்டார்கள்? என்ற கேள்வி காதில் விழுகிறது). 

3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு பென்சில் ஓவியம் வரைந்ததை அவருக்காக வெளியிடுகிறேன். 


Posted by kankaatchi.blogspot.com at 5:38 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, October 3, 2018

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

மனிதா  நீ எதற்கு கோயிலுக்கு செல்கிறாய்?

எனக்கு இன்று உண்மை  தெரிஞ்சாகணும்.

கோயிலுக்கு இறைவனை வணங்க செல்கின்றேன்.

ஏன் அங்கு மட்டும்தான் இறைவன் உள்ளானோ ?

பலருக்கு அப்படிதான் தோன்றுகிறது. அதனால்தான் அவனை
அங்கு காண  செல்வதாக கூறுகிறார்கள்.

இறைவன் உன்னுள்ளும் உள்ளான். உன்னை சுற்றியுள்ள
அனைத்திலும் உள்ளான் என்பது தெரியுமா .

சிலருக்கு தெரியும். பலருக்கு தெரியாது.

மனிதன் ஐம்புலன்களால்தான் இந்த உலகோடு தொடர்பு  கொள்ளுகிறான்.

அவனை உணரும் வரை மனதை நாம் ஒதுக்கி  தள்ள முடியாது.

கோயிலில் சிலர் அங்கு  கிடைக்கும் பிரசாதங்களை சுவைக்க செல்வதில் தவறேதும் இல்லை.

ஆனால் அந்த ஐம்புலன்களும் தங்கள் தனிப்பட்ட சக்திகளையும் செயல்பாடுகளையும் மறந்து ஒருங்கிணைந்தால்தான் ஒன்றேயான பரம்பொருளை உணர முடியும்.

அதற்கான வழி வகைகளை ஏற்படுத்தி தரும் இடம்தான் ஆலயம் என்பதை உணர வேண்டும்.

அதை உணராது தினமும் கோயிலுக்கு சென்று வருவது. மனம் என்னும் மாடு வெறுமனே  வெளியில் சென்று புல்  மேய்ந்து வருவதற்கு (கோயில் பிரசாதம் சாப்பிட்டு வருவதற்கு) மட்டுமே சமம்.

கோயிலின் வாசலில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் காலணிகளை வெளியிலேயே விடுவது (நாம் உடல் மீது கொண்டுள்ள அபிமானத்தை விடுவது)நம்முடைய உயிர் அணிந்துகொண்டிருக்கும் தோலால் மூடப்பட்ட நம் உடம்பைக் குறிக்கும்.

கோயிலின் உள்ளே பலி பீடத்தின் முன்பு வணங்குவது நம்  மனதில் உள்ள   நான் மற்றும் எனது எண்ணங்களையும் மற்றும் அனைத்து  தீய எண்ணங்களையும் விட்டு விட்டு தூய தெளிவான மனதுடன்
கருவறையில் நுழைவதைக் குறிக்கும்

கருவறையில் இருளில் உள்ள இறை வடிவம் மனிதர்களின் இதயத்தில்
உள்ளே உள்ள இருளில் உள்ள இறை வடிவம் போன்றது.

தீபத்தின் ஒளியில் வடிவம் தோன்றுவதைபோல் நம் உள்ளத்திலும்
தீபத்தின் ஒளி தோன்ற வேண்டும்.

தீப  ஆரத்தி காட்டப்படும்போது அனைத்தும் மறந்து(வடிவம் மறைகிறது-நாமும் நம்மை மறக்கின்றோம்) வெறும் ஒளி மட்டுமே நம் மனதில் நிறைகிறது. அனைத்தையும் மறந்து விளக்கின் ஒளியிலே விளக்க வொணா அமைதியை அடைகின்றோம்.

இந்த நிகழ்வு நம் மனதில் நிகழும் வரை கோயிலுக்கு செல்லவேண்டும்.

நினைத்தவுடன் அந்த நிலையை நாம் அடையும் நிலை வந்துவிட்டால்  அந்த நிலையிலேயே  நாம் இருந்து நிலையான இன்பத்தை அடையலாம்.

அதை விடுத்து மற்றவைகளில் கவனம் செலுத்துவதால் பயன் ஏதும்  இல்லை.

வழிபாட்டின் தத்துவம் அறிந்து வழிபாடு செய்யாவிடில் கோயில் சிலைகளின் மேல் ஓடும் பல்லிகளுக்கும் , எலிகள் போன்ற சிறு பிராணிகளுக்கும்  ,கரப்பான் பூச்சிகளுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லை.
Posted by kankaatchi.blogspot.com at 7:14 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Wednesday, September 26, 2018

யாருக்காக யார் சாவது ?





யாருக்காக யார் சாவது ?

இராமன் என்பவர் இறந்து விட்டார். 
அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை.

அவரது மனைவி,9 வயதான மகன்,பெற்றோர் 
அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பத்துக்கே குருஜியாக விளங்கும் அறிஞர் 
ஒருவர் அப்போது அங்கு வந்தார்.
அவரைக் கண்டதும் அவர்கள் 
மேலும் பெரிதாக அழ ஆரம்பித்தனர்.

இராமனின் மனைவி சொன்னாள் ”குருஜி!இவ்வளவு இளம் வயதில் என்னையும்
 என் மகனையும் நிர்க்கதியாக விட்டுப் போய் விட்டாரே? 
நான் என்ன செய்வேன்?

அவர் உயிருடன் வருவாரறென்றால் அதற்காக நான் எதுவும் செய்வேன்”
குருஜி அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் சொல்லி 
சமாதானப் படுத்த முயன்றார் 
ஆனால் அவர்கள் சோகம் குறையவில்லை.

கடைசியில் அவர் கேட்டார்”ஒரு கோப்பை தண்ணீர் கொண்டு வாருங்கள்”
தண்ணீர் வந்தது. அவர் கோப்பையை உடலின் அருகில் வைத்துத் தானும் அமர்ந்தார்.

பின் சொன்னார்”இராமன் உயிருடன் திரும்பி வர வேண்டும் என நினைப்பவர்,
இந்தத் தண்ணீரை அருந்தலாம்.இராமன் திரும்பி வருவார்.
ஆனால் அதற்குப் பதில் நீரை அருந்தியவர் மரணமடைவார்”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஆனால் யாரும் முன் வரவில்லை.

அவர் இராமனின் தந்தையைக் கேட்டார்” 
ஐயா! நீங்கள் உங்கள் மகனுக்காக உங்கள் உயிரைக் கொடுக்க மாட்டீர்களா?”

தந்தை சொன்னார்”நான் இறந்து விட்டால் 
என் மனைவிக்கு யார் ஆதரவு?அவளுக்காக நான் வாழ வேண்டும்”

தாயைக் கேட்க அவள் சொன்னாள்”
அடுத்த மாதம் என் மகளுக்குப் பேறுகாலம்.
நான் இறந்து விட்டால் அவளுக்கு யார் உதவுவது?”

மனைவி சொன்னாள்”நான் இறந்தால் என் பையனை யார் கவனித்து வளர்ப்பது? 
அவனுக்காக நான் வாழ வேண்டும்”
குருஜி பையனைப் பார்த்துக்கேட்டார்”
குழந்தாய்,உன் தந்தைக்காக நீ உயிர் விடுவாயா?”

அவன் தாய் உடனே அவனை இழுத்து அணைத்துக்கொண்டு சொன்னாள் 
”குருஜி,உங்களுக்கென்ன பைத்தியமா?
அவன் ஒரு குழந்தை.இனிமேல் தான் அவன் வாழ்க்கையே இருக்கிறது
. அவனைப் போய் நீங்கள் கேட்கலாமா?”

குருஜி சொன்னார்”உங்கள் அனைவருக்கும்
 ஏதாவது கடமை, பொறுப்பு இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். 
அப்படியானால் இராமனுக்கு இங்கு வேலையில்லை என்றாகிறது.
 எனவே தான் கடவுள் அவனை எடுத்துக் கொண்டார் .

 இப்போது இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.

ஆம் பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பவன் அவன்.

எந்தப் பூவை எப்போது பறிக்க வேண்டும் 
என்பது அவன் எடுக்கும் முடிவு.

நாம் யார் அதைக் குறை சொல்ல?
 கேள்வி கேட்க?“நாம் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறோம்,
அதில் பச்சை இலைகள் இருக்கும் வரை இலைகள் வாடிப்போய்,
 அது உயிரற்ற குச்சியானால் அதை நாம் கவனிக்கப் போவதில்லை.
 அதனிடம் அன்பு செலுத்தப் போவதில்லை.”

”உயிர் இருக்கும் வரையே அன்பு,பாசம் எல்லாம்
”“பின் மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே”.

K.N.RAMESH <knramesh@gmail.com>

Posted by kankaatchi.blogspot.com at 6:50 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Friday, September 21, 2018

மனித பிறவி எடுத்தென்ன பயன்?

மனித பிறவி எடுத்தென்ன பயன்?

மனித பிறவி 
எடுத்தென்ன பயன்?

அரக்கர் குலத்தில்  பிறந்த விபீஷணன்
இவ்வுலகில் அவதரித்த அரங்கனை
அடையாளம் கண்டு அறிந்து கொண்டு
அடைக்கலம்  அடைந்தான்.

அரக்கனுக்கே மகனாய் பிறந்த
பிரகலாதன்  அரவணைப்    பள்ளியானை
அன்போடு உபாசித்து அவன் மடியிலேயே
அமர்ந்துகொண்டான்.

ஆடு மேய்க்கும் இடையர்கள் அகிலத்தை
தன்னுள்ளே கொண்ட இறைவனாம்
கண்ணனை தங்கள் குலத்தில் அவதரிக்கச்
செய்து ஆனந்த வாழ்வு  வாழும்
பேறு  பெற்றனர்.

வானர குலத்தில்  பிறந்த அனுமனோ
ராமனாய் வந்த மாதவனை அறிந்துகொண்டு
அவன் சேவகனாய் சேவை செய்து இன்புற்றான்

நம்மையெல்லாம் கடைத்தேற்ற
நம்மிடையே மனிதனாய் தோன்றி
மா மனிதனாய் நம்மோடு வாழ்ந்து
இன்றும் அவன் பக்தர்களின் இதயத்திலே
வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீ ராம பிரானை
அறிந்து உய்யாது  போனால் மனித பிறவி
எடுத்தென்ன பயன்?
Posted by kankaatchi.blogspot.com at 7:20 PM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

Blog Archive

  • ▼  2023 (1)
    • ▼  July (1)
      • TRP RAMAN with PVC FLUTE @ 75(38)CARNATIC DIVOTION...
  • ►  2021 (1)
    • ►  October (1)
  • ►  2020 (1)
    • ►  November (1)
  • ►  2019 (36)
    • ►  June (1)
    • ►  April (5)
    • ►  March (2)
    • ►  February (5)
    • ►  January (23)
  • ►  2018 (60)
    • ►  December (4)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  September (12)
    • ►  August (7)
    • ►  July (5)
    • ►  June (2)
    • ►  May (10)
    • ►  February (1)
    • ►  January (14)
  • ►  2017 (157)
    • ►  December (19)
    • ►  November (22)
    • ►  October (7)
    • ►  September (11)
    • ►  August (14)
    • ►  July (20)
    • ►  June (14)
    • ►  May (18)
    • ►  April (5)
    • ►  March (8)
    • ►  February (8)
    • ►  January (11)
  • ►  2016 (133)
    • ►  December (7)
    • ►  November (13)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (17)
    • ►  July (17)
    • ►  April (12)
    • ►  March (14)
    • ►  February (24)
    • ►  January (24)
  • ►  2015 (183)
    • ►  December (28)
    • ►  November (12)
    • ►  October (18)
    • ►  September (32)
    • ►  August (28)
    • ►  July (16)
    • ►  June (13)
    • ►  May (1)
    • ►  April (4)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (27)
  • ►  2014 (295)
    • ►  December (33)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (6)
    • ►  August (20)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (26)
    • ►  April (41)
    • ►  March (42)
    • ►  February (39)
    • ►  January (65)
  • ►  2013 (472)
    • ►  December (50)
    • ►  November (23)
    • ►  October (27)
    • ►  September (26)
    • ►  August (47)
    • ►  July (38)
    • ►  June (74)
    • ►  May (44)
    • ►  April (71)
    • ►  March (33)
    • ►  February (23)
    • ►  January (16)
  • ►  2012 (137)
    • ►  December (16)
    • ►  November (17)
    • ►  October (4)
    • ►  September (16)
    • ►  August (19)
    • ►  July (2)
    • ►  April (11)
    • ►  March (11)
    • ►  February (18)
    • ►  January (23)
  • ►  2011 (74)
    • ►  December (26)
    • ►  November (40)
    • ►  October (8)

About Me

kankaatchi.blogspot.com
View my complete profile
Simple theme. Powered by Blogger.