Friday, July 31, 2015

இசையும் நானும் (34)

இசையும் நானும் (34)

இசையும்   நானும் என்னும் தொடரின்
என்னுடைய 34வது காணொளி

நானே இயற்றி பாடியுள்ள பாடல்.




ஹரி  என்று சொன்னாலும்
ஹரன் என்று சொன்னாலும்







அறியப்படும் பொருள் ஒன்றுதான்.
முடிவில் அறியப்படும்
பொருள் ஒன்றுதான் (ஹரி)






இதை அறியாது அனுதினமும்
வாதம் செய்யும் மனிதர்களே

உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு
உங்கள் இதயத்தின் உள்ளே
சென்று பாருங்களே  (ஹரி)

கல்லினில் இருப்பவன்
நாம் சொல்லும்
சொல்லினில் இருப்பவன் (கல்லினில்)

நம் கண்கள் காணும்
உயிர்கள் யாவுமாய் இருப்பவன் (ஹரி)

இந்த உண்மையை உணர்ந்துகொண்டு
உள்ளத்தில் பேதம் நீங்கி
உலகில் மகிழ்வோடு வாழுங்களே.


காணொளி இணைப்பு:
<iframe width="854" height="480" src="https://www.youtube.com/embed/QL84i7AUqnU" frameborder="0" allowfullscreen></iframe> 
Pictures-courtesy-google images. 



Monday, July 27, 2015

நான் யார் ?

நான் யார் ?

நான் யார் ?

இந்த கேள்விக்கு ஆதி சங்கரர் முதல்
கடைசியாக ரமணர் வரை பதில் சொல்லி விட்டார்கள்.

பகவான் ரமணர் எப்படி என்று வாழ்ந்தும்
காட்டி விட்டார் நமக்காக.






எவ்வளவு பிறவிகள்
இந்த வஸ்துவைப் பற்றி  கேட்பது ?

சாதனையில் இறங்க வேண்டாமோ ?

தினமும் சாப்பிட்டுவிட்டு
தூங்கி விழித்து முடிவில்
எழமுடியாமல் தூங்கி-மீண்டும்
விழிக்கும்போது வேறு ஒரு உடலில் விழித்து
இப்படியே போய்க்கொண்டிருந்தால் எப்படி?

தண்ணீரில் குதித்தால்தான்
நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்.

நீந்துபவனை பேட்டி  எடுப்பதினாலேயோ
நீச்சல் பற்றிய புத்தகங்களைப் படிப்பதினாலேயோ
அதைப் பற்றி சிந்தை செய்வதாலோ
நீச்சல் பற்றி பயிற்சியாளரின்
பேச்சைக் கேட்பதினாலேயோ
எந்த பயனும் விளையப் போவதில்லை.

அதைப்போல்தான் ஆன்மாவை அறிவதும்

இன்றே இப்போதே தொடங்குவோம்
முயற்சியை.நான் யார் என்பதை உணர

ஏனென்றால் அடுத்த கணம்
நாம் பிணமாக போய்
ஒன்றும் செய்ய முடியாமல் போய்
அடுத்த பிறவிக்காக விண்ணில்
அலையே வேண்டி நேரலாம். 

இசையும் நானும் (33)


இசையும்  நானும் (33)
இசையும் நானும் என்னும் இத்தொடரின் என்னுடைய

33 வது பாடல் -மவுதார்கன் இசையில்-

உயர்ந்த மனிதன் படத்தில் வரும் ஒரு இனிமையான பாடல்

Image result for uyarntha manithan


விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் உருவானது.

Image result for uyarntha manithan

அந்த பாடல் வரிகள் இதோ.
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு 
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு .

வண்ண விழியின்  வாசலில் என் தேவன் தோன்றினான் 
எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான் 
கன்னியழகைப்   பாடவோ அவன் கவிஞனாகினான் 
பெண்மையே உன் மேன்மை கண்டு கலைஞனாகினான் 
கலைஞனாகினான் (நாளை)

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் 
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன் 
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன் 
மங்கையின் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன் 
மயக்கம் கொண்டதேன்  (நாளை)

காணொளி இணைப்பு.

https://youtu.be/KZ-MWUHM0To


Saturday, July 25, 2015

இசையும் நானும் (32)

இசையும் நானும் (32)

இசையும் நானும் எனும் தொடரில் என்னுடைய

32 வது காணொளி. 

ஒரு தமிழ் பாடல்.

நானே இயற்றி பாடியது.

பாடல் வரிகள் கீழே.


இதயந்தன்னில்
ஆன்ம ஒளியாய்
இருந்துகொண்டு

என்னை இயக்கும்
உன்னை  என்று காண்பேனோ...இறைவா (இதயந்தன்னில் )

உதயம்தன்னில்
உலகைக் காக்க
உதித்தெழும்   ஜோதி
உன்னை காண்பது போல் (இதயந்தன்னில் )



கண்ணில் ஒளியாய்
திகழ்கின்றாய்

காதில்  நாதமாய்
இனிக்கின்றாய்

உண்ணும் உணவில் ரசமாய்
இருந்துகொண்டு உலகத்து
உயிர்களைக் காக்கின்றாய் (இதயந்தன்னில் )


காணொளி இணைப்பு.

https://youtu.be/u0ZTtC_6HWs


Thursday, July 23, 2015

இசையும் நானும் (31)

இசையும் நானும் (31)

இசையும்  நானும் என்னும் தொடரில் என்னுடைய 

31 வது பாடல். 


திரு பாபநாசம் சிவன் அவர்களின் 

பிரபலமான பாடல். 

பாடல் வரிகள் கீழே 


 பல்லவி 


கஜவதனா  
கருணா  சதனா 

சங்கர பாலா 
லம்போதர  சுந்தர 

அனுபல்லவி 

அஜனமரேந்த்ரனும்
முனிவரும் பணியும் 
பங்கஜ சரணா  
சரணம்  சரணம்  ஸ்ரீ 


சரணம் 

நீயே மூவுலகிற்க்கு   ஆதாரம் 
நீயே சிவாகம மந்த்ர  ஸாரம் 

நீயே வாழ்வின் என் 
ஜீவாதாரம் 

நீ அருள்வாய் 
சுமுகா  ஓம்கார 

மேலே கண்டுள்ள பாடல் 
என்னுடைய மவுத்தார்கன் இசையில். 

காணொளி இணைப்பு.



https://youtu.be/-cb0L_5JO9c







Tuesday, July 21, 2015

இசையும் நானும் (30)

இசையும் நானும் (30)






இசையும் நானும் என்னும் தொடரில்

பகவான் கண்ணன் மீது ஒரு பாடல்.

மவுத்தார்கனில் இசைத்துள்ளேன்.

பாடலின் கருத்து ஆங்கில மொழியாக்கத்துடன்.


இணைப்பு காணொளி:

https://www.youtube.com/watch?v=xzSDg7RAR8g
A TAMIL SONG IN MOUTHORGAN ON LORD KRISHNA -WITH ENGLISH -TITLES 

Sunday, July 19, 2015

பத்ராசல ராமர் புகழ் பாடுவோம்

பத்ராசல ராமர் புகழ் பாடுவோம் 


சென்ற பதிவில் "ஸ்ரீ ராம நாமம் மருவாம்" என்றார் என்ற பத்ராசல ராமர் மீது 
ராமதாசர் பாடிய கீர்த்தனையைப் பற்றி எழுதி அதை பாடி மகிழ்ந்தேன். 

தற்ப்போது அந்த பாடலின் தமிழாக்கத்தை திரு எஸ்.வி நாராயணன் அவர்கள் 
அனுப்பி வைத்துள்ளார். 

அதை அப்படியே தமிழ் பாடலாக மாற்றினால் 
எப்படி இருக்கும் என்று நினைத்தேன். 

பாடல் தேனாக இனிக்கிறது. 

அதன் வடிவம் கீழே. 


ஸ்ரீ ராம நாமம் 
மறவோம் மறவோம் 


சித்தத்தில் வேறொன்றும் 
நினையோம் நினையோம் 


மலையை குடையாய் பிடித்து 
ஆயர்களைக் காத்த 
கோவிந்தனை துதிப்போம் துதிப்போம் 
அவனின் கல்யாண குணங்களை மனதில் 
போற்றி மகிழ்வோம் மகிழ்வோம் 



       

அரங்கனின்  லீலைகளை எப்போதும் 
செவியில் கேட்போம் கேட்போம் 
அவன் தாள் வணங்காதவர் கதைகளை 
செவிமடுக்க மறுப்போம் மறுப்போம் 



       

ராம பக்தர்களின் உறவே 
எமக்கு வேண்டும் வேண்டும் 
காம தூரர்கள் உறவு 
எமக்கு வேண்டாம் வேண்டாம் 



     

நலம் தரும் நாராயணனை 
நம்புவோம் நம்புவோம் 
அல்லல் தரும் மனிதர்களை
நம்போம் நம்போம் 



           

நினைத்தாலே இன்பம் தரும் 
மாதவன் நாமம் மறவோம் மறவோம் 
சஞ்சலம் தரும் மரண பயம் 
கண்டு அஞ்சோம் அஞ்சோம் 




           

உலகைக் காக்கும் இறைவனுக்கு 
தொண்டு செய்வோம் செய்வோம்
ஊறு  விளைவிக்கும்  
எத்தர்களை மதியோம் மதியோம் 





பத்ராசலம் உறையும் ஸ்ரீராமனை 
எப்போதும் துதிப்போம் துதிப்போம் 
கவலையில்லா வாழ்வு 
பெற்று மகிழ்வோம் மகிழ்வோம். 


Saturday, July 18, 2015

OH LORD KRISHNA

OH LORD KRISHNA





OH LORD KRISHNA

YOU ARE MY EYES

THROUGH WHICH I SEE THIS WORLD 

CREATED BY YOU 


OH. THIS WORLD IS SO BEAUTIFUL 

WHICH CANNOT BE DESCRIBED IN WORDS.  


YOU ARE MY EYEBALLS 

WHICH IS GLITTERING 

AND GLOWING 

TO KEEP ME IN ETERNAL HAPPINESS 


YOU HAVE COME THIS WORLD 

TO GIVE US A PROSPEROUS LIFE 

AND TO LIFT US FROM IGNORANCE 

TO BLISS AND THE OCEAN OF PEACE

IN THE TROUBLED WATERS OF LIFE. 


EVEN THE SWEET VOICE OF A SINGING BIRD

NOR THE BEAUTIFUL SOUND EMANATES FROM 

YOUR FLUTE NEVER MATCH YOUR MELODIOUS 

SWEET SOUNDS COMING OUT OF YOUR ENCHANTING LIPS 


MOUNTAIN AMOUNTS OF WORRIES THAT 

KILL OUR HAPPINESS WILL BE BURNED  AWAY 

IN NO TIME LIKE A RAW COTTON  BEFORE A FIRE.

WHEN I THINK OF YOUR BEAUTIFUL FORM 


YOU ARE MY TREASURE FOR WHICH 

I HAVE NOT TAKEN ANY EFFORT 


LORD KRISHNA !

YOU ARE A CHARMING FLOWER 

WHICH NEVER FADES NOR BECOME  DRY




YOUR ARE THE NECTAR ALWAYS 

FLOWING IN MY HEART TO MAKE THIS 

WORLDY LIFE ENJOYABLE 

IN A BLISSFUL STATE 

OF NEVER ENDING HAPPINESS.





GLORY TO YOU OH! HARI 

THE LORD OF BRINDAVAN 

THE LORD OF GOPIS. 



எதையுமே தேவைக்குமேல்

எதையுமே தேவைக்குமேல்


எதையுமே தேவைக்குமேல்

எதையுமே தேவைக்குமேல் வைத்துகொள்வதும்,பயன்படுத்துவதும் தவறு என்று சாத்திரங்கள் சொல்கின்றன .எப்படி?
அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தால்அவனும் திருடனும் ஒன்றாகும் (ஒரு திரைப்பட பாடல்)
ஒருவன் தன் தேவைக்கு மேல் பொருட்களை சேமித்து அதை தானும் பயன்படுத்தாமலும்பிறர் பயன்படுத்த அனுமதிக்காமலும் வைத்திருந்தால் அந்த பொருள் நிச்சயம்கொள்ளையர்களால் கொள்ளையிடப்படும்(பதஞ்சலி யோக சூத்திரம் )


ஒருவருக்கு மிக குறைந்தளவு நகைகள் இருந்தாலே போதுமானது. ஆனால் கணக்கிட முடியாத அளவிற்கு நகைகளை சேமித்து வைக்கும் செல்வந்தர்களின் வீடுகளில்அவைகள் கொள்ளையிடப்படுகின்றன . பல நேரங்களில் அது அவர்களின் வாழ்விற்குஎமனாகவே முடிந்துவிடுவதை தினமும் நாம் காண்கின்றோம்)


எனவே தன்னிடம் அளவுக்கதிகமான உள்ளவற்றைஇல்லாதவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் உயர்ந்த எண்ணம் உலகில் அதிகரித்தால் மக்களிடையே ஏற்ற தாழ்வுகள் நிச்சயம் குறையும்

Friday, July 17, 2015

இசையும் நானும் (29)


இசையும் நானும் (29)

இசையும்  நானும் என்னும் தொடரில் 

பத்ராசல ராமதாசர் கீர்த்தனை.

"ஸ்ரீ ராம நாமம் மருவாம் மருவாம் "

முடிந்த அளவு பாட முயற்சி செய்துள்ளேன். 




ஸ்ரீ ராம நாமம் மருவாம் மருவாம் 
சித்தமு யமுனகு  வெருவாம்  வெருவாம் 
கோவிந்து நீ வேல கொலுதாம்  கொலுதாம் 
தேவுனி குணமுலு  தலுதாம்  தலுதாம் (ஸ்ரீ ராம நாமம்)

விஷ்ணு கதலு செவுல விந்தாம் விந்தாம் 
வேறே கதலு மாகு மந்தம் மந்தம் 
ராமதாசலு மாகு சாரம் சாரம் 
காமதாசலு மாகு சோரம் சோரம்  (ஸ்ரீ ராம நாமம்) 

அவனீஜ பத்தி சேவ மானம் மானம் 
மரியொக்க  ஜோலண்டே மௌனம் மௌனம் 
ஸ்ரீ பத்ர கிரிசூனி கந்தாம் கந்தாம் 
பத்ரமுதோ மானம் உந்தாம் உந்தாம் (ஸ்ரீ ராம நாமம்) 

பாடலின் காணொளி. 



https://youtu.be/VoC2kdak9zE


Monday, July 13, 2015

இசையும் நானும் (27)



இசையும் நானும் (27)

இசையும் நானும் என்னும் தொடரில் அடுத்த
பாடல். நானே இயற்றி பாடியது.






தயை  புரிய இன்னும்  தாமதேமேன்
உன் சன்னதியில் நின்று தரிசனம்
கண்ட பின்னும்  (கிருஷ்ணா)

குருவாயூர்தன்னில்
குழந்தை வடிவாக நின்றுகொண்டு
குவலயத்தைக் காக்கும்
கண்ணனே குருவாயூரப்பனே
கிருஷ்ணா  (தயை  )

வேய்ங்குழலில் நாதமும்
உன் திருவாய்மொழியில்
கீதமும் (வேய்ங்குழலில்)

பட்டத்ரியின் வாக்கில்
நாராயணீயமும் உலகிற்கு
தந்தருளிய நீ

கிருஷ்ணா(தயை  )

பாடலின் காணொளி இணைப்பு

https://youtu.be/iYqkhlYPLhs

Friday, July 10, 2015

இசையும் நானும் (25)

இசையும் நானும் (25)

இசையும்  நானும் என்ற தொடரில்

மவுதார்கனோடு இணைந்து பாடிய

ஒரு தமிழ் பாடல்.





வாசிப்பது
மவுதார்கனில் வாசிப்பது
எனக்கு சுவாசிப்பதைப் போல (சுவாசி)

இசையாய்  விளங்கும்
இறைவனை உணர

இதைவிட எளிதான வழி
இவ்வுலகில் உண்டோ (சுவாசி)

இசையை பயில்வோர்  அடைவார்
உள்ளத்தில் நிலைத்த ஆனந்தம் (சுவாசி)

காணொளிக்கு

இணைப்பு.

https://youtu.be/akxVbTB2r1s

Tuesday, July 7, 2015

இசையும் நானும் (24)

இசையும் நானும் (24)

இசையும் நானும் என்ற தொடரில்
என்னுடைய  அடுத்த படைப்பு
ஒரு தமிழ் பாடல் ஸ்ரீ குருவாயுரப்பன் மீது
இயற்றி பாடியுள்ளேன்.

அந்த பாடல் இதோ.


ஒருகண  நேரமும் இருந்திட இயலுமோ

உன் வேய்ங்குழலின் கானத்தை கேளாது

குருவாயுரப்பா  (ஒரு)

அதிகாலை வேளையில்
ஹரிநாம சங்கீர்த்தனம்
காற்றில் தவழும் நேரம்
கண் முன் தோன்றாதிருக்குமோ
உன் திருவடிவம்  (ஒரு)

கருணைக் கடலே
கார்மேக வண்ணனே
கடைக்கண் பாராய்
கமலா மலர் பாதனே  (ஒரு)


பாடலின் காணொளி.-இணைப்பு

https://youtu.be/4Wok6L9rVaQ

Sunday, July 5, 2015

மருத்துவ உதவியாளர்களின் சேவை பற்றி


மருத்துவ உதவியாளர்களின்  சேவை பற்றி 


Image result for nurses



மனிதர்களின் பிணி போக்கி
துன்பம் தேங்கிய முகத்தில்
இன்பத்தைக் கூட்டும்
மருத்துவர்களின் பணிக்கு
ஈடு வேறெதுவும் ஈடாகாது.

அதே சமயம் நோயுற்றவர்களை
தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து
அவர்களை நல்ல  நிலைக்கு கொண்டு வரும்
மருத்துவ உதவியாளர்களின்  பணியும்
பாராட்டுதற்குரியதே.

அதிலும் சிலர் தங்கள் பணியில்
அவர்களின் முத்திரையை பதிக்கிறார்கள்
என்பதற்கு கீழ்க் கண்ட
காணொளி ஒரு உதாரணம்.

பார்த்து மகிழ .




https://www.facebook.com/Kadhambam/videos/vb.363469940379117/898236526902453/?type=2&theater

ஒரு கணமும்இருக்க முடியுமோ

ஒரு கணமும்இருக்க முடியுமோ 





ஒருகண  நேரமும் இருந்திட  இயலுமோ
உன் வேய்ங்குழலின் இனிய கானத்தை
கேளாது  குருவாயூரப்பனே


அதிகாலை வேளையில் உன் ஹரிநாம
சங்கீர்த்தனம் காற்றில் மிதந்து வரும் போது
வாக சார்த்து என்னும் உன் தெய்வீக வடிவம்
என் கண் முன் தோன்றாதிருக்குமோ
குருவாயூரப்பனே

ஒரே ஒரு மயிலிறகைக் காண நேரினும்
குழற் கற்றையுடன் கூடிய
 ஒளி  வீசும் உன் திவ்ய முகம்
என் கண் முன் மின்னலெனத்
தோன்றி மறையுதே
குருவாயூரப்பனே


உன் திவ்ய சரித காட்சிகளை
நாடகமாய் காண்கையில்
உந்தன்  தெய்வீக லீலைகள் யாவும்
என் கண் முன் தோன்றி  பரவச
நிலையில் வைத்திடுமே

குருவாயூரப்பனே



காண்போர் உள்ளங்களை
கொள்ளை கொள்ளும் உன்
கள்ளபார்வையும் அருளை
அள்ளி தரும் கவின் மிகு வடிவமும்
என்னை என்றென்றும் நீங்காத
ஆனந்த  வாரிதியில்  ஆழ்த்திடுமே
குருவாயூரப்பனே .
l
Chowaloor Krishnankutty
அவர்களின் 'ஒருநேரமேங்கிலும்" என்ற பாடலை தழுவி எழுதியது

Thursday, July 2, 2015

இசையும் நானும் (22)

இசையும் நானும் (22)

என்னுடைய மவுதார்கன் இசைபயணத்தில்

22 வது பாடல்.

"வைஷ்ணவ ஜனதோ"

இந்திய சுதந்திர போராட்டத்தோடு இணைந்து ஒலித்த பாடல்

நரசிம்ம மேத்தா அவர்களால் இயற்றப்பட்டது.



எல்லோராலும் விரும்பி இசைக்கப்பட்ட பாடல்.

தேசப் பிதா மகாத்மா காந்திக்கு விருப்பமான பாடல்.

நானும் முயற்சி செய்திருக்கிறேன். மவுத்தார்கன் இசையில்.

காணொளி இணைப்பு.

https://youtu.be/40VAEUdj4Ys