Sunday, July 19, 2015

பத்ராசல ராமர் புகழ் பாடுவோம்

பத்ராசல ராமர் புகழ் பாடுவோம் 


சென்ற பதிவில் "ஸ்ரீ ராம நாமம் மருவாம்" என்றார் என்ற பத்ராசல ராமர் மீது 
ராமதாசர் பாடிய கீர்த்தனையைப் பற்றி எழுதி அதை பாடி மகிழ்ந்தேன். 

தற்ப்போது அந்த பாடலின் தமிழாக்கத்தை திரு எஸ்.வி நாராயணன் அவர்கள் 
அனுப்பி வைத்துள்ளார். 

அதை அப்படியே தமிழ் பாடலாக மாற்றினால் 
எப்படி இருக்கும் என்று நினைத்தேன். 

பாடல் தேனாக இனிக்கிறது. 

அதன் வடிவம் கீழே. 


ஸ்ரீ ராம நாமம் 
மறவோம் மறவோம் 


சித்தத்தில் வேறொன்றும் 
நினையோம் நினையோம் 


மலையை குடையாய் பிடித்து 
ஆயர்களைக் காத்த 
கோவிந்தனை துதிப்போம் துதிப்போம் 
அவனின் கல்யாண குணங்களை மனதில் 
போற்றி மகிழ்வோம் மகிழ்வோம் 



       

அரங்கனின்  லீலைகளை எப்போதும் 
செவியில் கேட்போம் கேட்போம் 
அவன் தாள் வணங்காதவர் கதைகளை 
செவிமடுக்க மறுப்போம் மறுப்போம் 



       

ராம பக்தர்களின் உறவே 
எமக்கு வேண்டும் வேண்டும் 
காம தூரர்கள் உறவு 
எமக்கு வேண்டாம் வேண்டாம் 



     

நலம் தரும் நாராயணனை 
நம்புவோம் நம்புவோம் 
அல்லல் தரும் மனிதர்களை
நம்போம் நம்போம் 



           

நினைத்தாலே இன்பம் தரும் 
மாதவன் நாமம் மறவோம் மறவோம் 
சஞ்சலம் தரும் மரண பயம் 
கண்டு அஞ்சோம் அஞ்சோம் 




           

உலகைக் காக்கும் இறைவனுக்கு 
தொண்டு செய்வோம் செய்வோம்
ஊறு  விளைவிக்கும்  
எத்தர்களை மதியோம் மதியோம் 





பத்ராசலம் உறையும் ஸ்ரீராமனை 
எப்போதும் துதிப்போம் துதிப்போம் 
கவலையில்லா வாழ்வு 
பெற்று மகிழ்வோம் மகிழ்வோம். 


1 comment: