Sunday, December 30, 2018

இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே



இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி ....  (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

இசை -இளையராஜா 
குரல்:ஹரிஷ் ராகவேந்திரா 
வரிகள்: மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.

MOUTHORGAN VEDIO-343






நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ சொப்பனந்தானோ பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ அற்ப மாயைகளோ உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ வானகமே இளவெயிலே மரச்செறிவே வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ வெறும் காட்சிப் பிழைதானோ (வானகமே)
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ(நிற்பதுவே) காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ(காலம்)
காலம் என்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் கோலமும் பொய்களோ அங்குக் குணங்களும் பொய்களோ

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ (நிற்பதுவே)


Wednesday, December 5, 2018

இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன் (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்...

.

இசையும் நானும் (339)-திரைப்படம்- அவன்தான் மனிதன்  (1975) பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்....

பாடல்- ஆட்டுவித்தால் யாரொருவர்.

இசை :எம்.எஸ்.விஸ்வநாதன் 
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-339




ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா 
ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா (ஆட்டுவித்தால் )

நீ நடத்தும் நாடகத்தில் நானும் ஒன்று 
என் நிழலில் கூட அனுபவத்தின் சோகமுண்டு 
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே 
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே (நண்பனிடம்) (ஆட்டுவித்தால்) 

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் 
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் 
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் 
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் (நன்மை)(ஆட்டுவித்தால்)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் 
அது கையளவே ஆனாலும் கலங்கமாட்டேன் 
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா 
அதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா (உணர்ந்துகொண்டேன்) (ஆட்டுவித்தால்) 

images courtesy-google images 

Tuesday, December 4, 2018

இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்




இசையும் நானும் (338)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- அத்தான் என்னத்தான்

பாடல்- அத்தான் என்னத்தான்

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி


குரல்: பி .சுசீலா 
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-338





அத்தான் என்னத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி...(அத்தான்)..
எப்படி சொல்வேனடி

அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான் ..எப்படி சொல்வேனடி..(அத்தான்) 

ஏன்  அத்தான் என்னை பார் அத்தான்
கேளத்தான் என்று சொல்லித்தான் (2)
சென்ற பெண்ணைத்தான் கண்டு துடித்தான்
அழைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி).(அத்தான்)

மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான்
முத்துதான் உடல் பட்டுத்தான்
என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான்
வளைத்தான் பிடித்தான் அணைத்தான் (எப்படி)(அத்தான்)

.



Sunday, December 2, 2018

இசையும் நானும் (337)-திரைப்படம்- பாவ மன்னிப்பு (1961) பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை


இசையும் நானும் (337)-திரைப்படம்-

பாவ மன்னிப்பு (1961)


பாடல்- வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இசை :விஸ்வனாதன்-ராமமூர்த்தி
குரல்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்

MOUTHORGAN VEDIO-337



57 ஆண்டுகளாகியும் என் நினைவில் நீங்காது நிற்கும் பாடல்.  
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் நீரும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
 நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்
ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே (2)

நிலை மாறினால் குணம் மாறுவான்  - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான்  - தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான்  - அது
வேதன் விதியென்றோதுவான் 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

பறவையைக்கண்டான் விமானம் படைத்தான் (2)
பாயும் மீன்களில் படகினைக்கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான் (2)
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

(வந்த நாள்)

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே 
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்

ம் ஹ்ம் ம் ஹ்ம்

(வந்த நாள்) .