இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
இசையும் நானும் (343)-திரைப்படம்- பாரதி .... (2000) பாடல்-நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
இசை -இளையராஜா குரல்:ஹரிஷ் ராகவேந்திரா வரிகள்: மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.
MOUTHORGAN VEDIO-343
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொப்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொப்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ (வானகமே) போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ(நிற்பதுவே)
காலம் என்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ(காலம்) காலம் என்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ (நிற்பதுவே)
மிகவும் ரசித்தேன் ஐயா...
ReplyDeleteஅருமையான பாடல் இது..
ReplyDeleteநன்றாக வாசிச்சுருக்கீங்க...அழகான கல்யாணி ராகம்...
கீதா
நன்றி .அவ்வப்போது வருகை தந்து ஊக்கப்படுத்துங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்
Delete