ஒரு கணமும்இருக்க முடியுமோ
ஒருகண நேரமும் இருந்திட இயலுமோ
உன் வேய்ங்குழலின் இனிய கானத்தை
கேளாது குருவாயூரப்பனே
அதிகாலை வேளையில் உன் ஹரிநாம
சங்கீர்த்தனம் காற்றில் மிதந்து வரும் போது
வாக சார்த்து என்னும் உன் தெய்வீக வடிவம்
என் கண் முன் தோன்றாதிருக்குமோ
குருவாயூரப்பனே
ஒரே ஒரு மயிலிறகைக் காண நேரினும்
குழற் கற்றையுடன் கூடிய
ஒளி வீசும் உன் திவ்ய முகம்
என் கண் முன் மின்னலெனத்
தோன்றி மறையுதே
குருவாயூரப்பனே
உன் திவ்ய சரித காட்சிகளை
நாடகமாய் காண்கையில்
உந்தன் தெய்வீக லீலைகள் யாவும்
என் கண் முன் தோன்றி பரவச
நிலையில் வைத்திடுமே
குருவாயூரப்பனே
காண்போர் உள்ளங்களை
கொள்ளை கொள்ளும் உன்
கள்ளபார்வையும் அருளை
அள்ளி தரும் கவின் மிகு வடிவமும்
என்னை என்றென்றும் நீங்காத
ஆனந்த வாரிதியில் ஆழ்த்திடுமே
குருவாயூரப்பனே .
l
Chowaloor Krishnankutty
அவர்களின் 'ஒருநேரமேங்கிலும்" என்ற பாடலை தழுவி எழுதியது
ஒருகண நேரமும் இருந்திட இயலுமோ
உன் வேய்ங்குழலின் இனிய கானத்தை
கேளாது குருவாயூரப்பனே
அதிகாலை வேளையில் உன் ஹரிநாம
சங்கீர்த்தனம் காற்றில் மிதந்து வரும் போது
வாக சார்த்து என்னும் உன் தெய்வீக வடிவம்
என் கண் முன் தோன்றாதிருக்குமோ
குருவாயூரப்பனே
ஒரே ஒரு மயிலிறகைக் காண நேரினும்
குழற் கற்றையுடன் கூடிய
ஒளி வீசும் உன் திவ்ய முகம்
என் கண் முன் மின்னலெனத்
தோன்றி மறையுதே
குருவாயூரப்பனே
உன் திவ்ய சரித காட்சிகளை
நாடகமாய் காண்கையில்
உந்தன் தெய்வீக லீலைகள் யாவும்
என் கண் முன் தோன்றி பரவச
நிலையில் வைத்திடுமே
குருவாயூரப்பனே
காண்போர் உள்ளங்களை
கொள்ளை கொள்ளும் உன்
கள்ளபார்வையும் அருளை
அள்ளி தரும் கவின் மிகு வடிவமும்
என்னை என்றென்றும் நீங்காத
ஆனந்த வாரிதியில் ஆழ்த்திடுமே
குருவாயூரப்பனே .
l
Chowaloor Krishnankutty
அவர்களின் 'ஒருநேரமேங்கிலும்" என்ற பாடலை தழுவி எழுதியது
பரவசப்படுத்தும் வரிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துகள்...
நன்றி DD
ReplyDelete