மார்கழி சிந்தனைகள்(5)
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் 
என்பார் சிலர். 
விதியை மதியால் மாற்றலாம் 
என்பார் ஒரு சிலர். 
அண்ட  சராசரங்களும் அந்த 
ஆதி சக்தியின் விதிகளுக்கு உட்பட்டுதான் 
இயங்கி வருகின்றன. 
பல கோடி  ஆண்டுகள் ஆன  போதிலும் 
அந்த விதிகள் அப்படியேதான் 
செயல்படுத்தப்பட்டு வருகின்றன 
இந்த அண்டத்தில் உள்ளவைகள் அனைத்தும் 
ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை 
ஒரு கடிகாரத்தில் துடிக்கும் சக்கரத்துடன் 
இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான 
சக்கரங்கள் ஒன்றோடொன்று இணைந்து 
நேரத்தை காட்டுவதுபோல்தான் நம் 
கண்முன்னே தோன்றுகின்ற காட்சிகள். 
கடிகாரத்தின் மேல் உள்ள முட்களை மட்டும்தான் 
நாம்தான் காண்கிறோம். அதன் உள்ள  இருக்கின்ற 
பகுதிகளையோ அதன் இயக்கங்களையோ, அல்லது 
அதை இயக்க செய்யும் சக்தியையோ நாம் அறியோம். 
அதுபோல்தான் இந்த உலகமும். அதன்பின் 
மாபெரும் சக்தி ஒவ்வொரு அணுவிலும் இருந்துகொண்டு 
அனைத்தையும் ஆர்பாட்டமில்லாமல் இயக்கிகொண்டிருக்கிறது. 
நாம் அந்த விதிகளை மீறும்போது தண்டிக்கப் படுகிறோம் 
அப்போதும் நம் அகந்தை எந்த பாடமும் கற்றுக்கொள்வதில்லை 
என்பதுதான் வேதனை தரும் விஷயம் 
நாம் தனி உயிரில்லை.நம் உடலுக்குள்ளேயே  கோடானகோடி 
உயிர்கள் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கின்றன .நாம் சுவாசிக்கும் 
காற்றில் கோடானுகோடி உயிர்கள் வருவதும் போவதும், மடிந்து போவதுமாய் இருக்கின்றன. 
இதைதான் பகவான் கண்ணன் பாரத போரில் அர்சுனனுக்காக 
அகண்ட தரிசனம் அளித்ததை  வியாச பகவான் நமக்கு 
சித்தரித்து காட்டியுள்ளார். 
எனவே அப்படிப்பட்ட மகா சக்திக்கு அடிபணிந்து வணங்கி  நின்றால் 
அது நமக்கு எல்லா நலன்களையும் அளித்து நம்மை வாழ வைப்பதோடு முடிவில் அது நம்மை அதனில் கரைத்துக் கொண்டுவிடும். 
                                                                                ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 
சோகம் தரும் உலக பொருட்கள் மீது மோகம்   விடுத்து 
பரமானந்தம் தரும் ஜகன் மோகனனான கண்ணனில் வடிவில் நம் 
மனதை செலுத்துவோம்.
ஆயிரம் நாமங்கள் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை
அனுதினமும் பாராயணம் செய்வோம். 
மாலவன் மாதமான மார்கழி மாதத்தில் அப்படிப்பட்ட பகவான் கண்ணனை நினைந்து நினைந்து அவன் அன்பில் உருகி அவனுள் ஆனந்தமாக  கரைந்துபோவோம்.