Monday, December 7, 2015

போனது போகட்டும். இனி வருங்காலம் நலமாக திகழட்டும்


போனது போகட்டும். இனி வருங்காலம் 
நலமாக திகழட்டும் 

வெள்ளம் வந்தது
 பாடுபட்டு சேர்த்து வைத்து
வீ ட்டை நிறைத்த பொருளனைத்தும்
வெல்லம் போல்  கரைந்து காணாமல் போனது.

போன பொருளனைத்தும் மீண்டும்
பெற வழியுண்டு

ஆனால் உடலை
விட்டு உயிர் போனால் மீண்டும்
பெற வழியில்லை என்பதை உணர்ந்தோர்
அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு
வீதிக்கு வந்தனர்.

வெள்ளம் சில நாளில் வடிந்துவிடும் 
ஆனால் உள்ளத்தில் கள்ளம் இருந்தால் 
என்றும் வாழ்வில்லை  வளமில்லை 

நல்ல உள்ளம் கொண்டோரே பாசத்துடன் 
நாதியற்றவர்களை ஆதரித்து பசியாற்றினார்

உள்நோக்கம் கொண்டாரோ ஊருக்காக
உள்ளம் உருகுவதுபோல் நடிக்கின்றார்.

பொருட்கள் அத்தனையும் சாக்கடையில்
இருக்க வீடில்லை குடிக்க நீரில்லை
முகவரியில்லை என்ற நிலை
வந்தபின்னும் இருப்பதை மற்றவரோடு
பகிர்ந்து உண்ணும் பக்குவம் வரவில்லை

ஒழுங்கில்லை எதற்கெடுத்தாலும்
மற்றவரை குறை கூறும் தீய பண்பு
மாறவில்லை.சட்டத்தை மதித்து
வாழும் முறையை கற்கவில்லை.

இதுவும் கடந்துபோகும் .பொறுமையாய் 
சிந்தித்து கடுமையாய் உழைத்தால் 
முன்பிருந்த நிலையை விட வாழ்வில் 
முன்னேற்றம் காண வழியுண்டு.  



No comments:

Post a Comment