இசையும் நானும் (8)
ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி (செஞ்சுருட்டி)
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி
அனுபல்லவி
ஆகம வேத கலா மய ரூபிணி
,
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞானவித்யேச்வரி ராஜ ராஜேஸ்வரி
சரணம்
பல விதமாய் உன்னை பாடவும் ஆடவும் (புன்னாகவராளி )
பாடி கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகமுழுதும் என தகமுறக் காணவும்
ஒருநிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் (நாதநாமக்ரியா)
உயரிய பெரியோருடன் ஒன்றிட கூட்டி வைத்தாய்
நிழலென தொடர்ந்த முன்நூழ் கொடுமையை நீங்க செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (சிந்து பைரவி)
துன்ப புடத்திலிட்டு என்னை தூயவனாக்கி வைத்தாய்
தொடந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனை தந்தாய்
அன்பை புகட்டி உந்தன் ஆடலை காண செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி
பாடலை கேட்க இணைப்பு கீழே
https://www.youtube.com/watch?v=-S6MGUVCT7A&feature=youtu.be
மிகவும் அருமையான எனக்கு மிகவும் பிடித்ததோர் பாடல்.
ReplyDelete//ஞானவித்யேச்வரி ராஜ ராஜேஸ்வரி //
மிகவும் அற்புதமான வரி :)
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!
ReplyDelete