ராமாயணத்தில் ராமனும் இலக்குவனும்
ராமாயணத்தில் ராமனும் இலக்குவனும்
நமக்கு என்ன சொல்ல வருகிறார்கள்?
ராமாயணம் அனைவருக்கும் தெரியும்
ராமனின் தம்பி இலக்குவன் தெரியும்
புராணம் தெரிந்தவர்களுக்கு ராமன் யார் என்றும்
இலக்குவன் அதாவது லஷ்மணன் யார் என்பதும் தெரியும்.
அது சரி இவர்களின் கதையை நாம் எதற்கு
தலைமுறை தலைமுறையாக பல்லாயிரம்
ஆண்டுகளாக திரும்ப திரும்ப படிக்கவேண்டும். ?
அது ஏன் என்று என் மனதில்
சிந்திக்கத் தோன்றியது.
இந்த இரண்டு பாத்திரங்களும் நமக்கு பல
விஷயங்களை நம் மனம் பண்பட
திரும்ப திரும்ப சளைக்காமல்
சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்தராமன் பாத்திரம் எப்போதும்
சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும்
அதுவும் நம்மை பெற்ற தாய் ,தந்தையரின் சொல்லை
கண்டிப்பாக காப்பாற்றவேண்டும்
எவ்வாளவு இழப்புக்கள் வந்தாலும் என்று
மீண்டும் நாம் ராமாயணத்தை படிக்கும்போதும்
பிறர் சொல்ல கேட்கும்போதும் விடாமல்
இந்த ராமன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ஆனால் யாரும் அதை காதில்
வாங்கி கொள்வதில்லை என்பதுதான் உண்மை
ராமன் என்றால் எல்லோரையும்
ரமிக்க செய்பவன்
எல்லோரையும்,ஈர்க்கக் கூடியவன்.
அதனால் அவனுக்கு ராமன் என்று
காரண பெயர் வந்தது.
அது என்னவோ உண்மை.
அவன் சொல்வதைக் கேட்காவிடினும்
அவனை, நினைக்க, அவனை வணங்க
அவனை நம்முடைய வழிபடு தெய்வமாய் ஏற்றுக்கொள்ள,
அவன் நாமத்தை திரும்ப திரும்ப சொல்லி மகிழ
அடுத்து இலக்குவன் யா? (தொடரும்)
No comments:
Post a Comment