Friday, February 3, 2017

கவலைகள் நம்மை பற்றாதிருக்க?

கவலைகள் நம்மை பற்றாதிருக்க?

எதிர்பார்ப்பு என்பது
நாம் நமக்கு வைத்துக்கொள்ளும் ஆப்பு.

ஆம் அப்படிதான்
எதிர்பார்த்தது நடந்தால்
மனம் கொள்ளும் மகிழ்ச்சி

அது நடவாதுபோனால்
அயற்சியினால்  துவண்டுவிடும்
மனம்

அத்தோடு போனால்
பரவாயில்லை.

அது தன் கூட்டாளிகளான
வெறுப்பு,பொறாமை,சோர்வு
வஞ்சம்,பழி வாங்கும் எண்ணம்
ஆகியவற்றை சேர்த்துக்கொண்டு
நம்மை நிரந்தர துன்பத்தில்
ஆழ்த்திவிடும்.

அதனால்தான்  கீதையில்
இந்த இரண்டையும் சமமாக
கருத  சொன்னான்

கடமையை ஒழுங்காக செய்
அந்த செயலின் பலன் உன்னை
தானே வந்தடையும்.

பலனை எதிர்பார்த்து எதையும்
செய்யாதே என்று எச்சரித்தான்..

ஆனால் யார் கேட்கிறார்கள். ?

கேட்டகிறார்களோ இல்லையோ
அவன் கூறிய வாசகங்களை பிரேம் போட்டு
கண்கள் எதிரே மாட்டி வைத்திருக்கிறார்கள்
அனைவரும்.

ஒவ்வொரு செயலிலும் இந்த அறிவுரையை.
கடைபிடித்தால் கவலைகள்
நம்மை பற்றாது.

நம் உள்ளத்தில்
உள்ள மகிழ்ச்சியும்  என்றும் வற்றாது.


No comments:

Post a Comment