இசையும் நானும் (164)
TAMIL Film -கவலையில்லாத மனிதன்
திரைப்படம் -
கவலையில்லாத மனிதன்
பாடல்
கவிஞர் கண்ணதாசன்.
இசை
விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பிறக்கும்போதும் அழுகின்றாய்
இறக்கும்போதும் அழுகின்றாய்
ஒருநாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழை என சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்
அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வது இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்
<div style="position:relative;height:0;padding-bottom:75.09%"><iframe src="https://www.youtube.com/embed/A6sm68jWIgE?ecver=2" style="position:absolute;width:100%;height:100%;left:0" width="479" height="360" frameborder="0" allowfullscreen></iframe></div>
No comments:
Post a Comment