Friday, April 28, 2017

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (1)

தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (1)

இந்த உலகத்தில் என்ன நடக்கிறது?

குறைந்த எண்ணிக்கையை கொண்ட
ஒரு சில குறுமதி படைத்த  கூட்டங்கள்
தனக்கு ஒரு தலைவனை வைத்துக் கொண்டு.
இந்த உலகிலுள்ள கோடானு கோடி மக்களை
அடிமைப்படுத்தி  ,அவர்களின் சிந்திக்கும் திறனை
அழித்து அவர்களின் வாழ்வை சிதைத்து கொண்டு
அக்கிரமம் செய்து கொண்டிருக்கின்றன.

அவர்களை எதிர்ப்பவர்களை அழிக்கின்றன

பாதிக்கப்பட்ட கூட்டங்களோ அவர்களுக்காக
பரிந்து போராடும் மனிதர்களுக்கு
ஆக்கமும் தருவதில்லை ஊக்கமும் தருவதில்லை.

அவர்கள்  தங்களின் நன்மைக்காகத்தான் போராடுகிறார்கள்
என்று உணரும் நிலையிலும் இல்லை.

உலகில் சுயநலம் இன்று ஒவ்வொருவர்
உள்ளத்திலும் குடி கொண்டுவிட்டது.

அவர்கள் ஏழையாகட்டும் அல்லது பணக்காரனாகட்டும்
அல்லாது எல்லாவற்றையும் இழந்து அல்லது துறந்து
ஊரை சுற்றும் துறவியாகட்டும் சரி
இந்த சுயநலத்திற்கு விதி விலக்கல்ல

எங்கு பார்த்தாலும் சுரண்டல் தான்.

பணக்கார நாடுகளும், வல்லரசு நாடுகளும் ஏழை நாடுகளின்
வளங்களை அசுரத்தனமாக சுரண்டி கொழுக்கின்றன.

அங்கு வாழும் மக்களை அவர்கள்
மண்ணிலேயே பிச்சைக்காரர்களாக்கி
அழகு பார்த்து மகிழ்கின்றன.

எதிர்ப்பவர்களை அங்கு வாழும் மக்களின்
முன்னேற்றத்திற்கு எதிரிகள் என்று முத்திரை குத்தி
மக்களுக்கு எதிராக தந்திரமாய் சதி தீட்டிவிடுகின்றன.

மக்களை மக்களில் ஒரு பிரிவினரே
சாதியின் பெயரால், மதங்களின்  பெயரால்,
பொருளாதார ஏற்ற தாழ்வுகள் பெயரால்,
இனத்தின் பெயரால், மொழியின் பெயரால்
இழிவு படுத்துவதும், ஒதுக்கி வைப்பதும்,
அவமானப்படுத்துவதும் அழிப்பதும்,
தங்கள் கூட்டத்திற்கு அவர்களை சேர்த்து கொள்வதும்
மறுப்பவர்களை அழிப்பதும்
வாடிக்கையாக  போய்விட்டது.

இந்த நிகழ்வுகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக தங்கு தடையில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

உலகம் தோன்றிய நாள் முதல் இதில் எந்த மாற்றமும் இல்லை என்பது வரலாறு.

ஒன்றே பரம்பொருள் என்று அறுதியிட்டு
உரைத்த வேதங்கள் இன்று
தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டன

யானையை பார்க்க இயலாத குருடர்கள்,
யானையின் ஏதோ ஒரு பகுதியை கையால் தடவி பார்த்து
கருத்து  கூறியதை போல அங்குமிங்குமாக
தவறான மொழி பெயர்ப்புகளை அரைகுறையாகபடித்துவிட்டு விளக்கம் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றனர்.

சாத்திரங்கள் உண்மை பொருள் அறியாது
 பிதற்றி திரியும் கூட்டம் இன்று பெருகி விட்டது.

மக்களின் அறியாமையை  தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு
ஒவ்வொருவர் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொண்டு  ஒருவொருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இந்த சொர்க்க பூமியான இந்த உலகை நரகமாக ஆக்கி கொண்டிருக்கின்றன.

(இன்னும் வரும்)

4 comments:

  1. உலகின் யதார்த்த நிலையை மிக அழகான
    முன்னுரையாகச் சொன்னவிதம்
    அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திப் போகிறது
    ஆவலுடன் தொடர்கிறோம்..
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. நன்றி திரு ரமணி அவர்களே.நீங்கள் என் வலைக்கு வந்து நெடு நாட்கள் ஆகிவிட்டது. நலமாக உள்ளீரா?

    நான் 2 ஆண்டுகளாக எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டேன் ஏனென்றால் என் கவனம் முழுவதும் மவுத் ஓர்கன் இசையில் மூழ்கிவிட்டது..170 இசை காணொளிகளை யு டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

    இருந்தாலும் இந்த உலகில் என்னை சுற்றி நடக்கும் அக்கிரமங்களை கண்டு சும்மா இருக்க முடியவில்லை.

    என்னுடைய உள்ள குமுறல்களை எங்காவது கொட்டி தீர்க்க வேண்டும் என்றும் எழுத தொடங்கிவிட்டேன்.

    இந்த உலக மக்களை அவர்களை படைத்த இறைவனே வந்தாலும் திருத்த முடியாது என்பதை நான் நன்றாக அறிவேன்.

    இந்த உலகம் இயங்க மூடர்களையும் அறிவாளிகளையும் படைத்தது அவன்தான்

    அவர்களுக்குள்ளே நடக்கும் மோதல்களை கண்டு ரசிக்கும் மாயக்கண்ணன் அவன்.

    அவைகளிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள நினைப்போருக்கு அபய கரம் அளிக்கும் ஆபத் பாந்தவனும் அவன்தான்.

    அபாயம் தவிர்க்கும் உபாயம் தந்து நம்மை காக்கும் சித்த புருஷர்களாகவும் மஹான்களாகவும் நம்மிடையே
    அவதரித்த கருணை தெய்வமும் அவனே

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியிலும் தங்களது உள்ளக்குமுறல் அனலாய் தெறிக்கிறது...

    அருமையான தொடக்கம் தொடர்வேன்.

    ReplyDelete