Saturday, September 23, 2017

நம்மை சுற்றிலும்?

நம்மை சுற்றிலும்?

நம்மை சுற்றிலும்  என்ன நடக்கிறது?

எங்கும் ஒரே அமைதியின்மை. 

உள்ளத்தில் ஒரே புகைச்சல்?

பொறாமை வெறுப்பு போன்ற கேடு விளைவிக்கக் கூடிய 
நச்சு பொருட்கள் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுப்புறத்திலோ கேட்கவேண்டாம் .

நீர், நிலா, நிலம், காற்று, ஆகாயம்,என 
எல்லாவற்றையும் பிளாஸ்டிக், அணு கழிவுகள், ரசாயன கழிவுகள் என ஒரு இடம் கூட மிச்சம் இல்லாமல் நிரப்பி அசுத்தமாக்கியது மட்டுமல்லாமல். அதன் தீய விளைவுகளை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வருகிறோம்.

இருந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம். 

ஒவ்வொரு மனிதனும் ஏதாவது காரணத்தை தன்  உள்ளத்தில் கற்பித்துக்கொண்டு கொண்டு மற்ற மனிதனோடு ஏதாவது ஒரு வகையில் விரோதம் பாராட்டிக் கொண்டு அமைதியில்லாமல் திரிவதோடு மற்றவர்களின் அமைதியையும் கெடுக்கிறான். 

எதோ ஒரு சிலர் இந்த நிலையை சரி செய்ய முயற்சிகள் எடுத்தாலும் அவைகள் ஒன்றும் எடுபடுவதில்லை 

ஆனால் உலகம் இப்படித்தான் இருக்கும். நாம் என்ன செய்ய வேண்டும்.?


வனவிலங்குகளைப்  பாருங்கள். சிங்கம் புலியை அடிக்கிறது. புலி மானை அடிக்கிறது. இருந்தாலும், காட்டிலே சிங்கக்குட்டியும், புலிக்குட்டியும், மான் குட்டியும் வளர்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும்தான் இருக்கின்றன. அப்படி இருக்க நாமும் பழக வேண்டும்-காஞ்சி  மஹா பெரியவா


முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டும். ஏனென்றால் முயற்சிகள் என்றும் வீண் போவதில்லை. 

No comments:

Post a Comment