Wednesday, August 22, 2012

அன்னை பூமியும் அண்டங்களும்


அன்னை பூமியும் அண்டங்களும் 

இந்த அண்டத்தில் உயிர்களும் 
அவைகள் வசதியாக வாழ்ந்து மடிந்து மீண்டும் பிறந்து மீண்டும் பிறவா நிலையை அடைய வாய்ப்பும் வசதிகளும் இறைவன் அளித்துள்ளான் 
இதை போன்ற தட்ப வெட்ப நிலைமை,மற்றும், பஞ்ச பூதங்களான நிலம் நீர் நெருப்பு ,காற்று,ஆகாயம் வேறு எந்த கோளிலும் கிடையாது 

மற்ற கோள்களில் பஞ்ச பூதங்களில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கும் .அவைகளில் நம் பூமியை போன்ற உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் கிடையாது. 

புராணங்களும் வரலாறுகளும் தெரிவித்துள்ள செய்திகள்படி வேற்று உலகத்து உயிர்கள் பூமிக்கு வந்து மனித உயிர்கள் போல் வாழ்ந்து உயர் நிலையை அடைந்ததாகத்தான் செய்திகள் உள்ளன 
அதேபோல் தெய்வங்களும் இந்த பூமிக்குத்தான் வந்து தவம் செய்து 
உயர் நிலையை அடைந்ததாக அடைந்ததாக செய்திகள் உள்ளன 

இறை அவதாரங்கள் எல்லாம் இந்த பூமியில்தான் நிகழ்ந்துள்ளன 

அதுவும் பாரதத்தில்தான் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும்தவம் இயற்றி இறைவனிடம் வரங்கள் பல பெற்று 
அகந்தையினால்  பல வரங்கள் பெற்று உயிர்களுக்கு தீங்கிழைத்த அரக்கர்களும் இறைவனால் அழிக்கப்பட்டதும் இந்த பூமியில்தான்.

சொர்கத்திற்கு இணையான வாழ்க்கையும், நரகத்திற்கு இணையான துன்பங்களும் இந்த பூமியில்தான் உள்ளன 

பண்டைய நாளில் தன்னை எதிர்ப்போரை சுயனலதிர்க்காக மக்களுக்கு துன்பம் விளைவிக்கும் அரக்கர்களை போல், காரணமின்றி கண்டவரை எல்லாம் எல்லாம் கொன்று குவித்த ஹிட்லர்,முசோலினி, போன்ற சர்வாதிகாரிகளும் தோன்றியது இங்கேதான் 

இன்றளவும் வல்லரசு நாடுகளும், தீவிரவாதிகளும் மதவாதிகளும், சமூக விரோதிகளும் மக்களுக்கு துன்பம் விளைவித்து கொண்டு சொகுசாக வாழ்வதும் இந்த பூமியில்தான் 

எனவே மற்ற கோள்களில் மனித இனத்தை போன்ற உயிரினங்கள் கிடையாது என்பது கலப்படமற்ற உண்மை 

அதை உணராது பூமியின் வளங்களை கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகள் மற்ற கோள்களுக்கு விண்கலங்களை அனுப்புவதால் எந்த பயனும் இல்லை 

உலகில் பல கோடி மக்கள் இருக்க இருப்பிடமின்றி,உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, சுதந்திரமின்றி தவிக்கும் போது அவர்களின் துன்பங்களை துடைக்க நடவடிக்கை எடுக்காமல் ஆயதங்களை உற்பத்தி செய்து இயற்க்கை வளத்தை வீணடிக்கும் வன்முறையை  கட்டவிழ்த்து விடும் அரக்கர்கள் விரைவில் அந்த இறைவனால் கடுமையாக தண்டிக்கபடுவார்கள் என்பது உறுதி

தொடர்ந்து தவறுகள் செய்யும் அவர்களை அழிக்க இறைவன் அவதாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. அவனின் கரங்களாக உள்ள பஞ்சபூதங்களே போதும். உலகில் தினம் தினம் எங்காவது புயலும், வெள்ளமும், சுனாமிகளும், பூகம்பங்களும் ,வெடி விபத்துகளும் நிகழ்ந்து கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. 

அவனன்றி ஓர் அணுவும் அசையாது

அவனன்றி ஓர் அணுவும் அசையாது 

அவனுக்கு தெரியாமல் ஒன்றும் நடவாது

ஒரு சம்பவம் நடப்பதும் நடவாமல் தடுப்பதும் அவனே

அவனை யாரும் ஏமாற்ற முடியாது

நடப்பவை நடந்தே தீரும் 

ஒரு சர்வாதிகாரி பல லட்சம் மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை தடுக்க முடிவதில்லை .வரலாற்றில் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சர்வாதிகாரி பிறக்கிறான். இறைவன் அவனுக்கு விதிக்கப்பட்ட கொலைகளை திட்டம் போட்டு அரங்கேற்று கொண்டுதான் இருக்கிறான். முடிவில் அவனும் மாண்டு போகிறான்.

ஒரு தீவிரவாதி சில நூறு மக்களை கொன்று குவிக்கிறான்
யாரும் அவனை பிடிக்க முடியவில்லை

ஒரு சுனாமியோ, புயலோ, வெள்ளமோ, பூகம்பமோ லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்குகிறது.எத்தனை  விஞ்ஞான கருவிகள் இருந்தாலும் அது வரும் நேரத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை .
வந்தால் அழிவுகளை தடுக்கும்சக்தி மனிதர்களுக்கு இல்லை  

உலகங்களை தோற்றுவிப்பதும் அதில் உயிர்களை நடமாட விடுவதும்
அவைகளை அழிப்பதும் இறைவனுக்கு மட்டுமே உள்ள தனிப்பெரும்
சக்தி

அதில் அவன் படைப்புக்கள் யாரும் தலையிடமுடியாது

நீ ஒழுக்கமாக இருக்க முயற்சி செய்

நீ உன் சுற்றங்களோடு அன்பாக இருக்க முயற்சி செய்

இயலாதவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்

இந்த அண்டத்தில் எது நடந்தாலும் அது நன்மையோ தீமையோ (உன் பார்வையில்) இறைவனின் ஆணைப்படிதான் நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் 


      அதை விடுத்து உலகில் நடைபெறும் ஒவ்வொரு மாற்றங்களுக்கும் செயல்களுக்கும் காரணம் கற்பிக்க நினைத்தால் அல்லது 
தலையிட்டால் உனக்கு குழப்பமே மிஞ்சும் 



Sunday, August 19, 2012

இறைவன் எங்கிருக்கிறான்?

இறைவன் எங்கிருக்கிறான்? 

இறைவனை உண்மையாக தேடுபவர்களுக்கு மட்டும்
அவன் புலப்படுகிறான்

புலன்கள் மூலம் இறைவனை காண முடியுமா?

நிச்சயம் முடியாது

ஏன் ?

புலன்கள் சக்தி மிக மிக குறைந்தவை .ஒரு வரையறைக்குட்பட்டவை
அதனால் அளவிடமுடியாததும் எந்த வரைமுறைக்குள்ளும் அடக்கமுடியாத
சக்தியான இறைவனை புலன்களால் அடையமுடியாது

இறைவனை நினைத்து புலம்புவதால் இறைவனை அடையமுடியுமா?

முடியும்

எப்படி?

இறைவனை நினைத்து புலம்பும்போது மனம் மற்ற எண்ணங்கள் எதையும் சிந்திப்பது கிடையாது. இறைவனை மட்டும் சிந்திப்பதால் மனம் மற்ற சிந்தனைகளிலிருந்து விடுபட்டு இறைவனோடு ஒன்றுபடுவதால் இறைவனை அடையமுடியும் .

மயிலையில் கபாலீச்வரர் கோயில் உள்ளது .இறைவனுக்குஏன் அந்த பெயர் வந்தது?

எண் ஜாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள் .
இறைவன் நம்முடைய தலையில்தான் ஒளி வடிவமாக ஒரு புள்ளி வடிவில் இருக்கிறான்.
தலைக்கு கபாலம் என்று பொருள்.
அந்த கபாலத்தில் உறையும் ஈஸ்வரனுக்கு கபாலீஸ்வரன் என்று பெயர்.

எனவே கோயிலுக்கு சென்று இறைவனை வணங்கும் போது இந்த சிந்தனையோடு வணங்கினால்  நமக்குள் இறைவனை உணரும் பாக்கியம் கிடைக்கும்


Thursday, August 16, 2012

கடவுளை ஏன் காண முடியவில்லை?

கடவுளை ஏன் காண முடியவில்லை?

கடவுள் அனைத்து  உயிரினங்களிலும் உள்ளார்

அவற்றில் அவர் ஆன்ம ஒளியாக இருந்து அவைகளை இயக்குகின்றார்

நாம் வடிவங்களைதான் காண்கின்றோம் அதன் உள்ளிருக்கும் இறைவனை பற்றி சிந்திப்பதில்லை

அவர் பஞ்ச பூதங்களாக இருந்துகொண்டு இந்த உலகின் நிர்வாகத்தை திறமையாக நடத்தி வருகின்றார்

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் தாங்கும் இந்த உடலும்
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது

உயிர் இந்த உடலை விட்டு பிரிந்த பின் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களோடு சேர்ந்து விடும்.

கடவுள் ஆகாசமாக இந்த பிரபஞ்சம் முழுவதும்  வியாபித்துள்ளார்
ஆகாசத்தில்தான் அனைத்து  அண்டங்களும் மிதக்கின்றன தோன்றுகின்றன,மறைகின்றன

நாம் நம் சிற்றறிவுக்கு எட்டியபடி கற்பனை செய்து வைத்துள்ள கடவுள்
என்பது நம் அறியாமையின் உச்ச கட்டம்

நம்முடைய செயல்பாடுகள் அனைத்தும் நாம் தங்கியுள்ள இந்த அழியும் உடல் தொடர்பானதே 

என்று நம் இந்த உடல் நாம் அல்ல என்றும் இந்த உடலில் உள்ள அழியாத ஆன்மாதான் நாம் என்று உணர்கிறோமோ அப்போதுதான் கடவுளை பற்றிய உண்மை ஞானம் நமக்கு கிடைக்கும்

அதுவரை இன்ப துன்பங்களிலும் அறியாமையிலும் உழன்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை 

Wednesday, August 15, 2012

பிறப்பிற்கான விதை எது?

பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலம்

அதுதான் வாழ்க்கை

அது வாழ்வதர்க்குதானே ஒழிய கவலைப்பட்டு
கிடைத்த வாழ்க்கையை வீணடிக்க அல்ல

வாழ்க்கையில் கடந்த கால நினைவுகளில் மூழ்குவதை விட்டுவிட்டு ,எதிர்கால கனவுகளில் உலவுவதை விட்டுவிட்டு நம் கையில் உள்ள நிகழ் காலத்தை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழக வேண்டும்

இதை புரிந்துகொள்வதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது

மீண்டும் பிறப்பு இறப்பு இப்படியே தொடர்கதை
திரும்பவும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்

எப்போதுதான் இந்த சுழலிலிருந்து விடுதலை கிடைக்கும் ?

விடுதலையை பெற போராட வேண்டும்

எப்படி போராடுவது?

பிறப்பிற்கான விதை எதுவோ அதை கண்டுபிடித்து
அதை அழித்து விட்டால் மீண்டும் பிறவி வராது

பிறப்பிற்கான விதை எது?

ஆசைகள்

ஆசைகளை ஒழித்துவிட்டால்,மீண்டும் புதிய ஆசைகள் தோன்றாமல்
பார்த்துகொண்டால் பிறவி பிணி நீங்கிவிடும் .மீண்டும் எந்த உடலிலும் புகுந்து துன்பப்பட வேண்டியதில்லை

Sunday, August 12, 2012

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி 

சினம் என்ற உணர்ச்சி இன்று உலகில்
அனைவரிடமும் மிகையாகவே காணப்படுகிறது

தனி மனிதனிடம் காணப்படும்சினம் 
அவன் வாழ்வை அழிக்கிறது
அவன் ஆரோக்கியத்தை அழிக்கிறது 
அவன் குடும்பத்தை அழிக்கிறது 

மற்ற மனிதர்களால் தூண்டிவிடப்பட்ட சினம்
அவன் வாழும் சமூகத்தையே அழிக்கிறது

ஒரு சிலையை வைக்க போராட்டம்
சிலர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
சிலவிஷமிகள் சிலையை உடைத்தால்அதற்க்கு போராட்டம்
இதனால் பொது சொத்துக்களுக்கு சேதம் பொதுமக்களுக்கு பாதிப்பு
பல உயிரிழப்புகள்

வதந்திகளால் 
ஓரிடத்தில்தொடங்கும் போராட்டம்
நாடு முழுவதும் பரவும்
ஊடகங்களின் உதவியினால் 

மதவெறி சாதி வெறிஇரண்டும் இன்று
இந்தநாட்டை நாசபடுதிகொண்டு வருகின்றன 
ஆளும் வர்க்கமும் அரசியல் கட்சிகளும் 
தங்கள் சுய லாபத்திற்காகஇந்த தீயை 
அணையாமல் காத்து தங்களை வள ப்படுதிகொள்ளவும்  வலுப்படுதிகொள்ளவும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டு வருகின்றன

இதனால்வீட்டினிலும் அமைதியில்லை 
நாட்டினிலும் அமைதியில்லை
உலகெங்கிலும் அமைதியில்லை 

மக்களிடம் சிந்திக்கும்திறன் மங்கிவிட்டது 
விட்டுக்கொடுத்து வாழும் போக்கு அருகிவிட்டது
சுயநலம் பெருகிவிட்டது 

இந்நிலை மாறி மக்களின் மனங்களின்
 நல்ல சிந்தனைகள் துளிர்விட்டு பெருகி
உலகில் அமைதியும் ஆனந்தமும் பெருக
இறைவன் அருள் செய்ய வேண்டும் 


Thursday, August 9, 2012

கல்லா கட்டும் பாபாக்கள்


கல்லா கட்டும் பாபாக்கள்

கல்லா கட்டும் பாபாக்கள்

காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஸ்வாமிகள்
ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வரும் ஆனந்தாக்கள்

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு 
அதை வெளியே அப்புறபடுத்த வழி அறியாமல் 
அலையும் மனித இனம்
பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் 
தவிக்கும் குரங்குகள் போல் பலர்
சுயலாபத்திர்க்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து
தங்களின் சொந்த வாழ்க்கை 
பறிபோய் தவிக்கும் பலர்
மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு
மனித நேயமற்ற செயல்களில்
ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம்
உலகம் முழுவதும் தன் மதம்தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைப்படுத்துவதும் சிறுமைபடுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் தீவிரவாத  கும்பல்கள் 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள்
மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர்
அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும்
அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது

நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக 
மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம்

மனிதகுலம்  வாழ உணவையும் மழையையும் தந்து தாய் போல் காக்கும் கடலில் அனைத்து  கழிவுகளையும் விட்டு மாசுபடுத்தும் பொறுப்பில்லா மக்கள்
 
கடற்கரையை ,நீர்நிலைகளின் கரைகளை, சாலை ஓரங்களை பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தும் கருங்காலி கூட்டம் 

நிலத்தடி நீர் வழங்கும் ஏரிகளை சேரிகளாக்கி  அரசியல் துணையுடன் அசுத்த படுத்தும் அராஜக கூட்டம் .அதற்க்கு துணை போகும் அரசியல் கட்சிகள்  

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் 

அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் ,கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ,ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது 

இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை 










இறைவா நீ அவதாரம் எடுத்து 
இவைகளையெல்லாம்
சரி செய்ய விரைவில் வரவேண்டும்.
வேறு வழியில்லை