கடவுளை ஏன் காண முடியவில்லை?
கடவுள் அனைத்து உயிரினங்களிலும் உள்ளார்
அவற்றில் அவர் ஆன்ம ஒளியாக இருந்து அவைகளை இயக்குகின்றார்
நாம் வடிவங்களைதான் காண்கின்றோம் அதன் உள்ளிருக்கும் இறைவனை பற்றி சிந்திப்பதில்லை
அவர் பஞ்ச பூதங்களாக இருந்துகொண்டு இந்த உலகின் நிர்வாகத்தை திறமையாக நடத்தி வருகின்றார்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் தாங்கும் இந்த உடலும்
பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது
உயிர் இந்த உடலை விட்டு பிரிந்த பின் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களோடு சேர்ந்து விடும்.
கடவுள் ஆகாசமாக இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளார்
ஆகாசத்தில்தான் அனைத்து அண்டங்களும் மிதக்கின்றன தோன்றுகின்றன,மறைகின்றன
நாம் நம் சிற்றறிவுக்கு எட்டியபடி கற்பனை செய்து வைத்துள்ள கடவுள்
என்பது நம் அறியாமையின் உச்ச கட்டம்
நம்முடைய செயல்பாடுகள் அனைத்தும் நாம் தங்கியுள்ள இந்த அழியும் உடல் தொடர்பானதே
என்று நம் இந்த உடல் நாம் அல்ல என்றும் இந்த உடலில் உள்ள அழியாத ஆன்மாதான் நாம் என்று உணர்கிறோமோ அப்போதுதான் கடவுளை பற்றிய உண்மை ஞானம் நமக்கு கிடைக்கும்
அதுவரை இன்ப துன்பங்களிலும் அறியாமையிலும் உழன்று கொண்டிருப்பதை தவிர வேறு வழியில்லை

அருமையாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteநன்றி DD அவர்களே
ReplyDeleteஉங்கள் ஒருவருக்காக மட்டும் நான் நான் அறிந்துகொண்ட உண்மைகளை பதிவு செய்துகொண்டே இருப்பேன்
இவ்வுலகில் பிறரின் அந்தரங்கங்களை தெரிந்துகொள்வதிலும்
பிறரை பற்றி வம்பளப்பதிலும்,புறம் கூறுவதிலும், வதந்திகளை பரப்புவதிலும் பிறருக்கு துன்பம் விளைவித்தலிலும் இறைவன் நமக்களித்த ஒப்பற்ற நேரத்தை விரயம் செய்வதிலும்தான் மனிதர்கள்
தங்கள் பிறவியை தொலைக்கிறார்கள். இரை தேடுவதோடு இறையையும் தேடு என்றார் ஒரு மகான்
கிடைத்தற்க்கரிய மனித பிறவியை வீணடித்தவர்கள் தங்கள் அறியாமையை நினைத்து பல்லாயிரம் ஆண்டுகள் வருந்த நேரிடும்.