நாம் நாமாக இருக்கிறோமா ?
இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
நாம் சுயமாக எண்ணி செயல் புரிகிறோமா ?
இல்லை என்றுதான் சொல்லவேண்டும்
ஏன் இவ்வாறு இருக்கிறோம் ?
இந்த கேள்வியை நாம் எப்போதும் நமக்குள் கேட்பதேஇல்லை
ஏனென்றால் நம் உள்ளம் சொல்வதை நாம் கேட்க தயாரில்லை
பிறரிடம் ஆலோசனை கேட்டே நாம் வாழ பழக்க பட்டிருக்கிறோம்
நாம் சந்தித்த மனிதர்கள் நம்மை வளர்த்தவர்களின் குண நலன்கள் பள்ளியில் நமக்குகற்பித்த ஆசிரியர்கள் நாம் படித்த புத்தகங்கள் என நம்முள்வாங்கிக்கொண்ட செய்திகளே நம்மை வழி நடத்தி செல்கின்றன
பழக்கபடுத்தப்பட்ட மிருகங்களை போல நாம் மற்றவர்களின் சுயநலத்திற்கு அடிமையாகி பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையைநாசமாக்கி கொள்கின்றனர்
அவைகள் நம் மனதை விட்டு என்றும் அகலுவதில்லை
நாமும் நம் அடுத்த தலைமுறையினை அதைபோல்தான் வளர்த்துக்கொண்டு வருகிறோம்
மனிதர்கள் என்று கூறி கொள்வதற்கு அருகதையற்ற பல செயல்களை செய்து வருகிறோம்
நல்ல கல்வி கற்றிரிருந்தும் பண்பில்லாமல் நடந்துகொள்வது இன்றைய நாகரீகமாகிவிட்டது
நம்மை பற்றி அறிந்துகொள்வதை விட பிறரை பற்றியும் அவர்களின் அந்தரங்கங்களை பற்றியும் தேவையற்ற செய்திகளை தெரிந்துகொள்வதிலும்அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும்தான் நம் வாழ்நாளில் பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது
ஒரு கூட்டம் சினிமா நடிகர்கள் பின்னால் மற்றும் சாமியார்களின் பின்னாலும் போய்க்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம் மதுக்கடைகளின் வாசலில் தங்கள் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கின்றது
உழைக்காமல் கொழுத்து கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
உழைத்து உழைத்து சாலையோரம் ஒடுங்கி கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
எதுவும் செய்யாமல் பிறரை சுரண்டியே பிழைப்பை நடத்தும் கூட்டம் ஒரு புறம்
இங்கு யாருக்கும் சுதந்திரம் கிடையாது
சட்டத்தினை மதித்து நடபவர்களுக்கு தண்டனை
சட்டத்தை மிதிப்பவர்களுக்கு பாதுகாப்பு
நம் நாட்டின் நிலைமை இதுதான்

உண்மையை சொல்லி உள்ளீர்கள்...
ReplyDelete