ஒரு ராம பக்தனின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்க வேண்டும்?
96 கோடி முறை ராம நாமத்தை ஜபம் செய்து அவன் தரிசம் பெற்ற தியாகராஜா ஸ்வாமிகள் கூறுகிறார்.
ஒரு விஷயத்திலும் பற்றில்லாமல் ஜீவன் முக்தனாக
விளங்கி ஆனந்தமடைபவன்
தான் ஜப தபங்கள் செய்வதாக பெருமை கொள்ளமாட்டான்
கபடம் நிறைந்த உள்ளத்துடன் பேசமாட்டான்
தனக்கு நிகராக ஒருவரும் இருக்கக்கூடாது என்று ஊரூராக விளம்பரம் செய்துகொண்டு திரியமாட்டான்
ஆசை நிறைந்த மனதுடன் மனைவி மக்கள் மீது சதா மோகம் கொள்ளமாட்டான்
இல்லற வாழ்வில் கிடைக்கும் இன்பங்களே சதமென்று எண்ணமாட்டான்
சிவன் விஷ்ணு என்ற வித்தியாசம் பாராட்ட மாட்டான்
உலகில் தான் ஒருவனே பரிசுத்தமானவன் என்றெண்ணி பொய்கள் பல பேசி வயிறு வளர்க்கமாட்டான்
அனுமனால் தாங்கப்படும் ராமனின் திருவடிகளை என்றும் மறக்கமாட்டான்
ராஜச மற்றும் தாமச குணங்கள் அவனுக்கு இருக்காது
தனக்கு லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை என்று எண்ணி புலம்பமாட்டான்
ராஜயோக மார்க்கத்தையும் பகவானின் சித்தம் தன்னிடம் வர வழி தேடுவதையே முழு நோக்கமாக கொண்டிருப்பான்
பிறைசூடிய பெருமானின் தோழனாகிய ஹரியை ஒரு பொழுதும் மறக்கமாட்டன்
மேற்கண்ட காரணத்தினால்தான் இவ்வுலகில் ராம பக்தர்கள் விரல் விட்டு என்னும் அளவில் உள்ளனர்.இருந்தும் தற்காலத்திலும் ராம பக்தி செய்து நமக்கு வழி காட்டிய மகா ஞானிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் யோகி ராம்சுரத்குமார்.
அருமையான பதிவு.
ReplyDeleteமனப்பூர்வ வாழ்த்துக்கள்.