ராமபிரானின் பெருமையை தியாகராஜர் பலவாறு போற்றுகின்றார் ஒரு பாடலில்.
என்றும் அழியாத உருவததாய்.
மகிமையின் உறைவிடமான உன்னிடம் யாருடைய திறமை என்ன செய்யமுடியும்?
சத்தியமான உன் ஆணைகளை மீற யாருக்கு சாமர்த்தியம் உள்ளது?
(உன் ஆணையை மீற முடியாமல்) சூரியன் இரவு பகலாக மகாமேரு பர்வதத்தை சுற்றவில்லையா?
ஆதிசேஷன் மிகுந்த பாரமுள்ள இப்பூமியை சுமக்கவில்லையா?
காசிபதியாகிய சிவன் காசியில் மரணமடையும் மாந்தரின் செவிகளில் உனது
பெயராகிய தாரக மந்திரத்தை உபதேசிக்கவில்லையா?
(ஆகவே உன் கட்டளையை மீற யாருக்கு திறமை உள்ளது?)
எனவே இக்கணம் முதலே ராம நாம ஜபம் செய்யுங்கள்
No comments:
Post a Comment