மனம் ஒரு குரங்கு
அந்த குரங்கை எப்படி நம் வழிக்கு கொண்டு வருவது?
ராமாயணத்தில் இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது
ராமாயணத்திலும் பல லட்சம் குரங்குகள் வருகின்றன
அனைத்து உயிர்கள் மீதும் கருணை கொண்ட
ஸ்ரீராமபிரான் அவர்களை தேடி
வனத்திற்கே சென்றான்
அங்குள்ள ஒரு குரங்கு மட்டும் ஸ்ரீ ராமபிரானிடம்
தன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டது
அந்த குரங்குதான் ஸ்ரீ ஹனுமானாக உருவெடுத்தது
இராமாயண காவியத்தில் ஸ்ரீ ஹனுமான் இல்லாமல்
எந்த சம்பவமும் இல்லை
அனைவரும் போற்றும் அந்த நிலையை அடைய
காரணம் என்ன?
அவரின் பக்தி,பண்பு,பணிவு,ஆகிய குணங்கள்தான்
இறைவனிடம் முழுமையாக சரணடைந்தால் நாமும்
அந்த பண்புகளை பெற்று உய்வடையலாம்
நம்மை சிறை வைத்திருக்கும் நம் மன குரங்கை
அடக்குவதை நிறுத்திவிட்டு அதை ஸ்ரீ ராமபிரானிடம்
கொண்டுநிறுத்தி விட்டால்போதும் அனைத்தும்
சரியாகிவிடும்
ஒவ்வொரு கணமும் ராம நாமத்தை சொல்லுவோம்
நலம் பெறுவோம் .ஸ்ரீ ராமபிரானின் அருள் பெற
ஹனுமானின் அருளை வேண்டுவோம்
நல்ல பதிவு ! நன்றி !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி DD sir
ReplyDelete