Saturday, April 7, 2012

புழுவை நாடி சென்று மரணத்தை தழுவும் மீன்கள் போல

ஏன் ?


எதை எதையோ எண்ணி கவலைப்படுகிறோம்
தேவையில்லாமல் பல கற்பனைகளை வளர்த்துகொண்டு
அவைகள் நிறைவேறாமல் போய்விட்டதை மனதில் 
நினைத்து நினைத்து நிகழ்கால சந்தோஷங்களை 
இழந்துகொண்டு வாழ்வை துன்பமயமாக்கி கொள்ளுகிறோம் 

இறைவன் ஏராளமான இன்பங்களை நாம் கேட்காமலேயே 
அள்ளி அள்ளி கொடுத்திருக்க  அவைகளை
அனுபவிக்காமல் இன்பம் தருவதுபோல் தோற்றமளித்து 
நம்மை துன்ப கடலில் தள்ளி மூழ்கடிக்கும் விஷயங்களையே 
நாம் நாடி செல்கிறோம் தூண்டிலில் வைத்திருக்கும் 
புழுவை நாடி சென்று மரணத்தை தழுவும் மீன்கள் போல
 
நம்மை காக்க அறிவிருந்தும் அதை மறந்து உணர்ச்சிகளுக்கு
அடிமையாகி அறிவற்றவர்களோடு சேர்ந்து கொண்டு 
இறைவன் அளித்த அழகான வாழ்\கையை சிதைத்து கொள்ளுகிறோம்

இவையெல்லாம் தேவைதானா என்று ஒரு கணம் சிந்தித்தால் 
நம்மை சூழ்ந்துள்ள துன்பமெல்லாம் இன்பமாக மாறி விடும் 

புலன்களிடம் நம்  மனதைஒப்படைக்காமல் 
நம்மை படைத்த இறைவனிடம் நம் மனதை 
ஒப்படைத்துவிட்டால் போதும்

அவன் நமக்கு அளித்துள்ள 24மணி நேரத்தில் 
நமக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்கிகொண்டிருக்கும் அவனோடு 
உரையாட சில நிமிடங்கள் தினமும் செலவிட்டால் போதும் 

நம் வாழ்வு வளம் பெறும்
நலம் பெறும் 

No comments:

Post a Comment