Friday, October 5, 2012

தலைவன் என்பவன் யார்?

தலைவன் என்பவன் யார்?

யாரை நாம் தலைவனாக
ஏற்றுக்கொள்ள வேண்டும்?

இக்காலத்தில் உள்ளதுபோல்
ஆமாம் சாமிகளை சேர்த்துக்கொண்டு
பிறருக்கு தொல்லை கொடுத்துகொண்டிருக்கும்
எண்ணற்ற மனிதர்கள்தான் தலைவனா?

இந்த உலகில் எல்லோரும்
தலைவனாகிவிடமுடியாது
தலைவனாக திகழ்பவனுக்கு
பிறரை வழி நடத்தி செல்லும்
திறமைகள்  இருக்கவேண்டும்

நல்ல பண்புகள் இருக்கவேண்டும்.
அப்போதுதான் அவனை
பின்பற்றி செல்பவர்களும்
இந்த உலகும் நன்மை அடையும்.

தீய பண்புகள் உடைய தலைவர்கள்
திறமை உடையவர்களாக இருப்பினும்
நல்ல பண்புகள் இல்லாவிட்டால் அவர்களை
பின்பற்றி செல்பவர்களும்
இந்த உலகும் மிகுந்த துன்பத்திற்கு
ஆளாவது தவிர்க்கமுடியாதது.

இதே நிலைமைதான் கணக்கற்ற தெய்வங்களுக்கும்
அந்த தெய்வங்களை ஏற்று வழிபடும் பக்தர்களுக்கும்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில சக்திகள் உண்டு.
ஒரு சில தெய்வங்களுக்கு பல சக்திகள் உண்டு.
ஆனால்  எப்படியும் ஒவ்வொரு தெய்வத்திற்கும்
ஒரு சில,ஏன் பல குறைகள் இருக்கும்.
அதன் சக்திகள் ஒரு வரையறைக்குட்பட்டுதான் அது இயங்கமுடியும்.
அதனால்தான் எண்ணற்ற தெய்வங்கள் இன்று வழிபடப்படுகின்றன.

புராணங்களிலே படித்திருக்கலாம்
ஒருவன் சக்திகளை பெற்று பிறர் மீது ஆதிக்கம்
செலுத்துவதற்காக தவம் செய்து,வரம் பெற்று,
பிறரை துன்புறுத்தி  இறுதியில் வரம் கொடுத்த
தெய்வத்தை விட ஒரு உயர்ந்த சக்தி பெற்ற
மற்றொரு தெய்வத்தால் மாண்டு போவதை பார்க்க முடிகிறது.

எனவேதான் நம் முன்னோர்கள் பலகாலம்
தவமிருந்து ஆராய்சிகள் செய்து.
எந்த சக்தியாலும் தோற்கக்கடிக்கப்படாத தெய்வம் எது
என்று கண்டிபிடித்து உணர்ந்து அதை தெளிவாக்கி உள்ளனர்.

 உணர்ந்தவர்கள் கீழ்நிலை சக்திகளை நாடுவதை விடுத்து.
எல்லா சக்திகளும்,கொண்ட தன்னை எந்த சூழ்நிலையிலும்
காப்பாற்றக்கூடிய  தெய்வங்களை தங்கள் தலைவனாக
ஏற்றுக்கொண்டு. நாடி தவம் செய்து உயர்ந்த நிலையை
அடைந்து மாறா இன்பத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.  

ஒரு தலைவனுக்குரிய தகுதிகள் என்ன
என்பதை கம்பர் வர்ணிக்கின்றார்.

உலகம் அனைத்தையும் தன்னிலிருந்து
உருவாக்குபவனும்,அதை நிலை பெற செய்பவனும்,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவைகளை நீக்குவதும்
நீக்கியவற்றை  காணாமல் செய்து தன்னுள்ளே இழுத்துக்கொள்பவனும் போன்ற கணக்கற்ற செயல்களை விளையாட்டாக செய்யும் தகுதி எவன் உடையவனோ அவன்தான் தலைவன்
அப்படிபட்டவனைத்தான்
 நாங்கள் சரணடைவோம்  என்று பாடியுள்ளார்.

அப்படிப்பட்ட தெய்வம் யார்?
வேறு யாருமில்லை ஸ்ரீ ராமன்தான்
ஸ்ரீ ராமநாமத்தை பாடுவோம்












உயர்வு பெறுவோம். உய்வடைவோம்.

3 comments:

  1. சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி திரு DD/seshadri
    அவர்களே

    ReplyDelete