சுகம் எங்கே இருக்கிறது?
தேவையற்ற குப்பைகளை நம் புலன்கள்
நம் மனதிற்குள் கொட்டிகொண்டே இருக்கின்றன .
ஏது சுகம்?
எது சுகம் ?
சுகத்தை எப்படி அடைவது?
சுகம் நிரந்தரமாக இருக்குமா?
இப்படியெல்லாம் மனித குலம்
சுகத்தை தேடி வாழ்நாள் முழுவதும் அலைகிறது
சிலர் எது சுகம் என்றே அறியாமல்
அதை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
சிலருக்கு வாழ்நாள் முழுவதும் அது கிடைப்பதேயில்லை
சிலருக்கு எப்போதாவது சுகம் கிடைக்கிறது
சிலர் சுகமாக இருப்பதுபோல் வெளியிலிருந்து
பார்ப்பவர்களுக்கு தெரிகிறது ஆனால் அவர்கள்
உள்ளே மனதில் சோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்
சிலர் வெளியில் பார்ப்பதற்கு சுகமாக இல்லை
போன்று தோன்றும் ஆனால் அவர்கள்
தங்களுக்குள் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
சிலருக்கு சுகம் கிடைத்தாலும் அது நிலைக்காது
அது உடனே அவரிடமிருந்து பிரிந்து சென்று விடும்
சிலருக்கு சுகம் கிடைத்தாலும் பிறர்
அவர்களை சுகமாக இருக்க விட மாட்டார்கள்
சும்மா இருப்பதே சுகம்
என்று சித்தர்கள் சொல்லுகிறார்கள்
சும்மா இருப்பது சுலபமல்ல
உடலால் சிறிது நேரம் சும்மா இருக்கலாம்.
ஆனால் உடல் சும்மா இருந்தால் அது கெட்டுபோய் அழிந்துவிடும்.
மனம் எந்த எண்ணங்கள் இல்லாமல்
இருப்பது மிகவும் கடினமாக காரியம்.
அதை காலி செய்வதற்கு இறைவனின் நாமத்தை
சொல்லிகொண்டிருந்தால் மற்ற எண்ணங்கள்
காலப்போக்கில் மறைந்துவிடும்
பிறகு அதையும் மறந்து நின்றால்
நம் உள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும்
இறைவனை தரிசனம் செய்யாலாம்
எப்போதும் சுகமாக இருப்பவர் ஒருவர்தான்.
அவர்தான் சுகப்ரம்மம் என்ற சுக மகரிஷி
இந்த உலகத்திற்கு பாகவதத்தை உபதேசித்தவர்.
அவர் வியாச பகவானின் புத்திரர்.
பிறவியிலேயே பிரம்ம ஞானி.
ஆனால் பிரம்ம ஞானிக்கு எதுவுமே தேவையில்லை
அவர் எப்போதும் இடைவிடாத
ஆனந்தத்திலேயே மூழ்கியிருப்பவர்
அப்படிப்பட்டவருக்கும் தான் அனுபவிக்கும்
ஆனந்தத்தை விட உயரிய ஆனந்தத்தை
தேடியபோது அவர் கண்டதுதான் பகவான் கண்ணனின்
லீலைகள் அடங்கிய பாகவதம்.
தேவையற்ற குப்பைகளை நம் புலன்கள்
நம் மனதிற்குள் கொட்டிகொண்டே இருக்கின்றன .
அந்த குப்பைகள் நாளுக்குநாள் மலைபோல் குவிந்துகொண்டே இருக்கின்றன. அவைகளை அப்புறபடுத்த யாரும் முயற்சிப்பதே கிடையாது .அனைவரும் குப்பை மேட்டில் வீடுகள் கட்டுவதுபோல அந்த குப்பைகளை அப்புறப்படுத்தாமல் ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவதால் அவர்களின் முயற்சிகள் ஒன்றும் பயனளிப்பதில்லை
அந்த குப்பைகள் அழுகி நாற்றமெடுத்து அதிலிருந்து
பூச்சிகளும் கிருமிகளும் உற்பத்தியாகி
அந்த குப்பைகள் அழுகி நாற்றமெடுத்து அதிலிருந்து
பூச்சிகளும் கிருமிகளும் உற்பத்தியாகி
நம் மனதையும் உடலையும்
நாசமாகிகொண்டு இருக்கின்றன
நாசமாகிகொண்டு இருக்கின்றன
அவைகளை நாசம் செய்ய வேண்டுமென்றால்
பகவான் கிருஷ்ணனை மட்டும் உங்கள் உள்ளத்தில்
விளையாட விடுங்கள். அவன் உங்கள் மனதில்
உள்ள அனைத்து அசுரர்களையும் அழித்து
உங்களுக்கு ஆனந்தமயமான
வாழ்வை நிச்சயம் அருள்வான்
பக்தியுடன் எவன் ஒருவன் பாகவதத்தை படிக்கிறானோ
அவன் இவ்வுலக மாயையிலிருந்து விடுபடுவதுடன்,
நிரந்தரமான சுகத்தை அடைவான் என்பது
அனுபவித்தவர்கள் கூறும் உண்மை.
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
மிகவும் சிறப்பான பகிர்வு... நன்றி...
ReplyDeleteநன்றி DD மற்றும் RN அவர்களே
ReplyDelete