இன்று கண்ணன் என்னும் கருந்தெய்வம்
அவதரித்த நாள்
கண் படைத்த பயன் அந்த கண்ணனை
மலர்களால் அலங்கரித்து வெண்ணை, பழங்கள், இனிப்புகளை
படைத்து வணங்கி அனைவருக்கும் அளித்து மகிழுங்கள்
கண்களால் அவன் அழகை பருகி பார்த்தனுக்கு
சாரதியாய் விளங்கிய அவனை உங்கள் உள்ளத்தில்
வைத்து பூசியுங்கள்.
பாரத போரில் அர்ஜுனனுக்கு வெற்றியை தேடித்தந்த
அந்த கண்ணன் உங்களுக்கும் வாழ்வில்
வெற்றியை தேடி தருவது சத்தியம்
விண்ணுலகில் தேவர்கள் மண்ணுலகில் மனிதர்கள்
பாதாள உலகில் அசுரர்கள் இருக்கையில்
இரண்டிற்கும் இடையில் இருக்கும் இடைகுலமான
மனித குலத்தில் வந்து நாம் செய்த தவப்பயனால் அவதரித்து
சுயநல பேய்களை அழித்து, இறைவனின் மகிமையை
மானிடர்கள் மட்டுமல்ல தேவர்கள்,அரக்கர்கள் அனைவருக்கும் உணர்த்தி
பக்தர்களை காத்து இறைவனை அடையும் வழியை உபதேசித்து
அன்பு தெய்வம் கண்ணனின் பிறந்த நாள் .
தான் அரசனான பின்பும் தன் மாணவ பருவ நண்பனான குசேலனை
அன்போடு தனக்கு சரிநிகர் சமானமாக அமரவைத்து வரவேற்று அவனுக்கு
உதவி செய்த பண்பு இக்கால மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
தன்னை அண்டியவர்களை காத்தவன்,
மண்டியிட்டவர்க்ளை மன்னித்தவன்
அவன் பெருமை அறியாது சண்டையிட்டவர்களை அழித்தவன்,
பக்தியோடு சரணடைந்தவர்களை
ஆதரித்து காத்தவன் .கண்ணபிரான்.
இக்கால ஆட்சியாளர்கள், தீவிரவாதிகள்,
மத வெறிய்ர்களைபோல் தங்களிடம் உள்ள ஆயுதங்களையும்,
சக்திகளையும் கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அரக்க
மனமுடைய மனிதர்களை போல் அல்லாது
தன்னுடைய தெய்வீக சக்திகளை அப்பாவி
மக்களை கொடுமைப்படுத்திய மன்னர்களையும்,
மனிதர்களையும் அழிக்க பயன்படுத்தி நாட்டு மக்கள்
மகிழ்ச்சியாக வாழ வழி செய்த அன்பு தெய்வம் கண்ணபிரான்.
ஆயிரம் உறவுகள் இருந்தும் தன்னுடைய மானத்தை காத்துக்கொள்ள இயலாத திரௌபதியின் மானத்தை காக்க ஆடை தந்து காத்தவன் துவாரகாநாதன்
அவன் லீலைகளை கூறும் நூல்களை
பக்தியுடன் பாராயணம் செய்வீர்
தெளிவான,மனதுடன் அவனை பூசித்து
அன்போடு அனைவருடனும் மகிழ்ச்சியாக வாழ்வீர். ,
/// தான் அரசனான பின்பும் தன் மாணவ பருவ நண்பனான குசேலனை அன்போடு தனக்கு சரிநிகர் சமானமாக அமரவைத்து வரவேற்று அவனுக்கு உதவி செய்த பண்பு... இக்கால மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்... ///
ReplyDeleteஇன்னும் நிறைய நிறைய நிறைய... கற்றுக் கொள்ள வேண்டும்... மிக்க நன்றி சார்...
நல்லவற்றை கற்பதற்கும்
ReplyDeleteகற்றபடி நிற்பதற்க்கும்தான்
மனித பிறவியினை இறைவன்
மனமுவந்து நமக்கு அளிக்கின்றான்
அதை முறையாக பயன்படுத்தி
நன்றியுடன் அவன் பாதம் நினைந்து
நம் கடமைகளை ஆற்றுவோம்