Saturday, September 1, 2012

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

எல்லா மனித உயிர்களும் ஒரு தாயின் கர்ப்பத்திலிருந்துதான் 
வெளி வருகிறது 

அதேபோல் எல்லா உயிர்களும் இவ்வுலகில் அதன் வாழ்வு முடியும்போது அதன் உயிர் விண்ணிற்கும் உடல் மண்ணிற்கும் தான் செல்கிறது 

ஆனால் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில்தான் அனைத்து சீர்கேடுகளும் மனித மனங்களில்  புகுத்தப்பட்டு மனிதர்களில் ஒரு பகுதியினர் ன் குட்டிகளை தானே கொன்று தின்னும் சில விலங்குகளை போல் மாறி மனித குலத்தை  துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்

வறியவனின் பிறப்பு பகலில் காண இயலா விண்மீன் போன்றது

செல்வ குடியில் பிறப்பவனுக்கு பகலிலேயே விண்மீன்கள் ஜொலிக்கின்றன 

வறியவனின் குழந்தை மரக்கிளையில் கட்டிவைத்த தன் தாயின் கிழிந்த புடவையில் இயற்க்கை சூழலில் துயில்கிறது 

செல்வ செழுப்பின் பிறந்த குழந்தையோ குளிர் சாதன அறையில் தங்க தொட்டிலில் துயில்கிறது

இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம் .மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேற்றுமைகள் போல். 

குழந்தைகளை சுற்றி உள்ளவர்கள்தான் ஆர்பாட்டம் செய்கிறார்களே ஒழிய அந்த குழந்தைக்கு எதுவும் தெரியாது அது வளர்ந்து தன்னை சுற்றியுள்ள உலகையும் மனிதர்களையும் புரிந்து கொள்ளும்வரை .

குழந்தைகளுக்கு நாம் உயர்வு தாழ்வை பற்றி போதிக்காத வரை எல்லா குழந்தைகளும் அன்பாகத்தான் பழகும் .

அவர்களில் மனதில் பாகுபாடு,வெறுப்பு ,பொய்மை ,பொறாமை ,போன்ற நஞ்சுகளை மனித சமூகம் விதைக்காமல் இருந்து அன்பை,நேர்மை,ஒழுக்கம் ஆகியவைகளை மட்டும் போதித்தால் போதும். இந்த உலகம் இன்ப பூமியாக மாறிவிடும்

இறைவன் படைக்கும் போது அனைவரையும் ஒன்றாகத்தான் படைக்கிறான் 
அழிக்கும்போது ஒன்றாகத்தான் அழிக்கிறான் .

நாம் அனைவரும் அவனின் படைப்பை ஒன்றாக காணும்போது தான் சுயநலம் விலகும்.பொதுநலம் தலை தூக்கும் .துன்பம் தொலையும்.இன்பம் விளையும். 

1 comment:

  1. /// குழந்தைகளின் மனதில் பாகுபாடு, வெறுப்பு, பொய்மை, பொறாமை, போன்ற நஞ்சுகளை மனித சமூகம் விதைக்காமல் இருந்து... அன்பு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவைகளை மட்டும் போதித்தால் போதும். ... இந்த உலகம் இன்ப பூமியாக மாறிவிடும்... ///

    இதற்கு மேல் என்னங்க வேண்டும்...?

    மனம் கவர்ந்த பதிவு... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete