தெய்வம் நின்று கொல்லும்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று
ஆனால் இன்று குழந்தைகள் படும் பாடு
மிகவும் கவலைக்குரியது மட்டுமல்லாமல்
வேதனைக்குரியதும் ஆகும்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல்
அவர்களை குடும்பத்தின் வறுமை கருதி
வேலைக்கு அனுப்புவதும்
அல்லது அவர்கள் அனாதையாய் போய் அவர்களை
சுற்றங்கள் கவனிக்காத நிலையில் வேறு
வழியில்லாமல் வேலைக்கு போவதும்
இன்று உலகளாவிய பிரச்சினை ஆகிவிட்டது.
ஆனால் அதே நேரத்தில் குறுக்கு வழியில்
பணக்காகாரர்கள் ஆக நினைக்கும்
குறுகிய நோக்கம் கொண்டகொடியவர்கள்
பெரியவர்களை வேலைக்கு வைத்தால்
அதிக கூலி கொடுக்கவேண்டும், மற்றும் பல தொழிலாளர்யூனியன்
அரசு குறுக்கீடு போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்
என்பதற்காக மிக குறைந்த ஊதியத்திற்கு
சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி
அவர்களை கொத்தடிமைகளை போல் நடத்துவதுடன்
அவர்களின் எதிர்காலத்தையும் சிதைக்கின்றனர்.
அவர்களின் சுயமரியாதை, கல்வி, சுதந்திரம் மறுக்கபடுகிறது.
படிப்பறிவில்லாத அவர்களை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டு
சமூகத்தில் கொலை, கடத்தல், கொலை போன்ற செயல்களை அரங்கேற்றிவருகிரார்கள்.
ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான் குழந்தைகள் காணாமல் போவதும்
அவர்களின் நிலை பற்றி மற்றவர்கள் கவலைபடாமல் இருப்பதும்
வாடிக்கையான செயலாகிவிட்டது.
சமீப காலமாக பள்ளி செல்லும் குழந்தைகளை
கடத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகிவிட்டன.
கடத்தப்பட்ட சிறுவர்கள்,குழந்தைகள், பாலியல் தொழிலுக்கும்,
திருட்டு குற்றங்களுக்கும், பிச்சை எடுப்பதற்கும் பயன்படுத்தி
ஆதாயம் தேடும் சமூக விரோத கும்பல்கள் இன்று நாட்டில் பெருகிவிட்டன
இன்று அதை போன்றவர்கள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலும் உலக அளவிலும் கொடிய செயல்களை அரங்கேற்றி கொண்டிருகின்றனர்
சிறுவனாகிய பிரகலாதனுக்காக வைகுண்டத்தில் பள்ளி கொண்ட பெருமான் நரசிங்கபெருமனாய் அவதரித்து ஹிரண்ய கசிபுவை வயிற்றை கிழித்து கொன்று தன் பக்தனை காப்பாற்றியதைபோல நிச்சயம் ஒருநாள் அபலை குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் ஒவ்வொரு மனிதனும்
அது போன்ற கொடுமையான தண்டனையை அடைவான் என்பது உறுதி
நாட்டில் நடக்கும் கொடுமைகளிலே இது தான் மிகவும் வருத்தப்படும் விசயங்கள்....
ReplyDeleteநன்றி.திண்டுக்கல்/கல்கண்டு அவர்களே
ReplyDeleteகுழந்தைகள் தான் படும் துயரங்களை/துன்பங்களை வெளிப்படுத்த தெரியாமல் மனதிலேயே வைத்துகொண்டு அவதிப்படுகிறார்கள்
அவர்கள் சொல்வதை பெற்றோர்களும் கவனிப்பதில்லை
பள்ளியில் ஆசிரியர்களும் கேட்பதில்லை
யாராவது அந்நியர்களிடம் அவர்கள் குறைகளை சொன்னால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது
அதனால்தான் பல குழந்தைகள் வீட்டைவிட்டு ஓடிபோவதும் ,மன மனநோயாளிகளாவ்தும்,கொலை திருட்டு போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதும் ,போதை பழக்கத்திற்கு ஆளாகுவதும் இன்று அதிகரித்துக்கொண்டே போகின்றன
பெற்றோர்களும் மற்றோர்களும் அவர்களின்நிறைவேறாத ஆசைகளை குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்களின் வாழ்வை பெரிதும் பாதிக்கின்றன
சிறு வயதில் தங்கள் குழந்தைகள் மீது அன்பை பொழிந்த பெற்றோர்களுக்கு முதுமையில் அவர்களுக்கு கிடைப்பது இதயத்தை தைக்கும் குழந்தைகளின் சொல்லம்புகள் மட்டுமே
காரணம் குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்காமையும் ,
அவர்களின் மனதை புரிந்து கொள்ளாமல்,அவர்களை மிரட்டியும், விரட்டியும் வளர்த்ததுதான் என்பதை புரிந்து கொள்ளாததுதான்.
ஒருநாள் அபலை குழந்தைகளின் வாழ்வை சீரழிக்கும் ஒவ்வொரு மனிதனும்
ReplyDeleteஅது போன்ற கொடுமையான தண்டனையை அடைவான் என்பது உறுதி //
நச் நச். பேப்பரில் படிக்கும் போது மனசு பதைபதைக்குது. நம் குழந்தைகள் எந்த பிரச்சனையிலும் மாட்டாமல் பத்திரமாய் வீடு வந்து சேரவேண்டுமே என்று நித்யம் பிரார்த்தனை செய்யும் நிலமை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
ReplyDeleteஇறைவனிடம் வைக்கும் நம்பிக்கை என்றும்
வீண் போவதில்லை
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு
மட்டுமல்லாமல் இறைவனிடம் பிரார்த்தனை
செய்து ஆன்ம சக்தியை வளர்த்துக்கொள்ள
இளம் வயதிலேயே பெற்றோர்கள் அவர்களை
ஊக்குவிக்கவேண்டும்