இரவேது பகலேது
இரவேது பகலேது
ஒளி வடிவான இறைவனை
தன்னுள்ளே கண்டவர்க்கு
இன்பமேது துன்பமேது
அனைத்தும் அவன் செயல்
என்று உணர்ந்தவர்க்கு
துக்கமேது துயரேது
நிகழ்வதனைத்தும் நிமலனின்
லீலை என அறிந்தவர்க்கு
விருப்பேது வெறுப்பேது
பொறுப்பேது பொல்லாங்கு ஏது
தன்னையே அவனிடம்
ஒப்படைத்தவர்க்கு
வாழ்வேது சாவேது
பிறப்பேது இறப்பேது
என்றும் அவன் நினைவில்
வாழ்பவர்க்கு
அன்பால் நிறைந்த இதயம்
அதில்தான் ஒளியான
இறைவன் உதயம்
இதை உணர்ந்தால் மட்டுமே
அல்லலில்லா ஆனந்த வாழ்வு
சாத்தியம் .
No comments:
Post a Comment