Friday, March 4, 2016

மனம் படுத்தும் பாடு (5)

மனம் படுத்தும் பாடு (5)

மனம் தான்
எல்லாவற்றிற்கும் ஆதாரம்

அதை நம் வசப்படுத்திவிட்டால்
அதன் பிறகு இவ்வுலக வாழ்க்கை மிகவும்
இன்பம் நிறைந்த சோலையாக மாறிவிடும்.

அவரவர்  வாழ்வு
அவரவர்  கையில்தான்
இருக்கிறது என்பது உண்மை .

இந்த உண்மையை 
அறியாதவர்கள்தான்
மனம் மீது குறை கூறுகிறார்கள்.

தன்னிடல் உள்ள  குறைகளை அறிந்துகொண்டு
அதை சரி செய்ய முயலாதவன் எப்போதும்
தன் தவறுகளுக்கும் பிறர் மீது எப்போதும் குறைகூறியே
தன் வாழ்வை நரகமாக்கிக்கொள்ளுவது  மட்டுமல்லாமல்
அவன் குடும்பம் மட்டுமல்ல அவனோடு தொடர்பு கொண்ட
அனைவரின் வெறுப்பையும் பகையையும் உருவாக்கிக்  கொள்கிறான்


மனதை  தன் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல்
அது போகும் வழியில் தன் வாழ்க்கையை
அதன் போக்கில் விட்டுவிட்டு பல துன்பங்களை
அனுபவித்துக்கொண்டு  அதை ஒரு
குரங்கிற்கு ஒப்பிட்டு அதை இழிவு படுத்துகிறார்கள்.


அதுவும்  அதை ஒருகள்ளை குடித்து
போதையில் இருப்பதாகவும்
அப்போது அதை ஒரு தேள் கொட்டிவிட்டதால்
அது தறி கேட்டு அலைவதற்கு ஒப்பிடுகிறார்கள்.


எவ்வளவு விலை உயர்ந்த வண்டியானானாலும்
அதன் பிரேக்கை சரியாக பயன்படுத்தத்தெரியாதவன்
விபத்தில் சிக்கி அல்லல்படுவது தவிர்க்க முடியாதது. 

மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்
தன் உணர்ச்சிகளுக்கு  என்றும்  அடிமையாவதில்லை.

அதனால் அவன் புலன்களும் அவன் கட்டுப்பாட்டில்
இருக்கின்றன.

உணர்ச்சிகளுக்கு அடிமையானவன் தன் அறிவை
பயன்படுத்தும் சக்தியை இழந்துவிடுவதால் அவன்
மற்றவர்களின் கட்டுபாட்டில் எளிதாக போய் வலிய
சிக்கிக் கொண்டு தன் அழிவைத் தானே தேடிக்கொள்வான்.

உணர்சிகளைக் கட்டுப்படுத்துவதில்
நாம் உண்ணும் உணவு
பெரும் பங்கு வகிக்கிறது
என்பதை உணரவேண்டும்.

மற்றும் நாம் பழகும் மனிதர்களின் கூட்டுறவும்
நம் மனம் மீது ஆதிக்கம் செலுத்துவதில் 
முக்கிய பெரும் பங்கு வகிக்கிறது  என்பதையும்
மறுக்கமுடியாது.





No comments:

Post a Comment