Thursday, March 10, 2016

தியானம் என்றால் என்ன ?

தியானம் என்றால் என்ன ?(1)

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் என்ன என்று

அறிந்துகொள்ளாமலே இன்று தியானத்தை

பற்றி மணிக்கணக்காக ,மாதக்கணக்காக ஏன்

வருடக்கணக்காக பலர் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தியானத்தில் பல முறைகள் உருவாக்கப்பட்டு எந்த

முறையிலும் தியானத்தின் வெற்றியை அடைய முடியாமல்

குழம்பிக்கொண்டிருப்பவர்கள் கோடானுகோடி.


அதை வைத்து காசு பார்க்கும் கேடிகளும் கோடி.


சரி .நேரடியாக  விஷயத்திற்கு வருவோம்.


தியானம் என்றால் எப்போதும், எந்நிலையிலும் 

விழிப்போடு இருப்பது .


ஆனால் இன்று எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கப்படுவது

என்னவென்றால் எல்லாற்றையும் மூடிக்கொண்டு

எல்லாவற்றிலிருந்தும் விலகி தனியே போய்

அடங்காது திரியும் மனதை அடக்க முயல்வது .


முடிவில் கிடைப்பது தோல்வி ஒன்றுதான்


இந்த தத்துவத்தை சொல்லிக் கொடுப்பவன்

பல கோடிகளுக்கு அதிபதியாகி மற்றவர்களை

அவனுக்கு அடிமையாக்கி கொள்கிறான்.  (இன்னும் வரும்)


4 comments:

  1. விழிப்புணர்வோடு இருப்பது ஒரு வகைத் தவம்.
    இது சரி
    விழிப்பு என்பது தன்னை மறந்த விழிப்புநிலை


    podhuvan sengai

    ReplyDelete
    Replies
    1. நிலையான இன்பம் வேண்டுமென்றால்
      தன்னை மறக்க வேண்டும் அதைதான் "தன்னை மறந்து இன்புற நீ ஒரு தந்திரம் சொல் நிலாவே " என்ற வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

      Delete
    2. Mohan Muthusamy
      1:00 PM (2 hours ago)


      அன்புள்ள பட்டாபிராமன் சார், தியானம் என்றும் விழிப்போடு இருபது என்பது மிக அருமையான கருத்து. ஆனால் தியானம் என்று பெயரில் ஏகப்பட்ட தியானக் கூடங்களில் அரசாங்க ஆதரவுடன் அதிக கட்டணம் வசூலித்து வருகிறார்கள் இல்லை கொள்ளை அடித்து வருகிறார்கள்.இது ஒழிப்பது எப்படி என்றே தெரியவில்லை . நன்றி வணக்கம் மோகன் ஊரப்பாக்கம்

      Delete
    3. தியானம் என்ற சொல்லே மனிதர்களுக்கு ஒரு அதிசய சொல்லாக தெரிகிறது. அதை கற்றுக் கொள்வதற்கு மிகவும் முயற்சியும் பயிற்சியும் தேவை என்று ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
      பாமர மனிதர்களை விட மிகவும் படித்த மனிதர்கள் இந்த மாய வலையில் விழுந்து விடுகிறார்கள். என்பதுதான் உண்மை. எதையும் நாம் ஒழிக்க வேண்டியதில்லை.அதில் உண்மை இல்லை என்று தெரிந்தவுடன் அது தானாகவே ஒருநாள் காணாமல் போய்விடும்

      Delete