Saturday, April 30, 2016

ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?




ஹனுமானைப் போல் உனக்கு சேவை செய்ய வில்லை
மாறாக வாழ்நாள் முழுவதும் மற்றவரின் தேவையை
பூர்த்தி  செய்வதிலேயே காலத்தை கழித்த இவனுக்கு
ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

சதாசிவ ப்ரம்மேந்திரரைப்  போல்
புலனை அடக்கி பல்லாண்டுகள் தவம்
ஏதும் செய்ததில்லை மாறாக புலன் வழி
சென்று துன்பமும் இன்பமும் மாறி மாறி
அடைந்து உன்னை மறந்து திரிந்த இவனுக்கு
 ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

புரந்தர தாசரைப் போல் கோடிக்கணக்கான
மதிப்புள்ள செல்வங்களை கண  நேரத்தில்
துறந்து உன் பாதமே கதி என்று வைராக்கியத்துடன்
புறப்படாது அற்ப பொருட்களின் மீது
மோகம் கொண்டு அனுதினமும் அல்லல்படும்
இந்த அற்பனுக்கு ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

கூரேசர் போல் குருநாதன் அழைத்தவுடன்
பட்டம் பதவி செல்வமனைத்தையும் அப்படியே
விட்டுவிட்டு அவர் பின் சென்ற அந்த பக்த சிரோன்மணி
போன்ற சஞ்சல மனமில்லாத குணமற்ற இவனுக்கு
ராமா நீ இந்த ராமனுக்கு கிடைப்பாயா?

உன்னை அறிந்துகொள்ளும் ஞானமும் இல்லேன்
உன்னைக் குறித்து தவம் செய்யும் சக்தியும் இல்லேன்
உன் நாமம் ஒன்றே கதியென்று நம்பி இவ்வுலகில்
வாழும் இவன் மீது  இரங்கி  உன் அருளை தா !


No comments:

Post a Comment