கார்த்திகை தீபம்(1965)
Hero | S.A.Asokan |
Music Director | R.Sudharsanam |
Lyricist | Kannadasan |
Singers | TMS |
Year | 1965 |
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா (எண்ணப்பறவை)
விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா (எண்ணப்பறவை)
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
இன்பம் பெறவில்லையா
இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா
உன் துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா (எண்ணப்பறவை)
துடிப்பது தெரியல்லையா
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா (எண்ணப்பறவை)
ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
அருகில் நெருங்கிடவா
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா
அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா (எண்ணப்பறவை)
வருடி கொடுத்திடவா
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா (எண்ணப்பறவை)
’எண்ணப்பறவையை வெகுநாட்களுக்கப்புறம் மனதில் சிறகடிக்க வைத்தீர்கள். நன்றி.
ReplyDeleteஎத்தனை வருடங்களாக இந்த மௌத் ஆர்கன் உங்கள் கையில்?
நன்றி நண்பரே. முதன் முதலாய் என் இசைக்கு கருத்து
Deleteதெரிவித்துள்ளீர்கள். நான் என்னுடைய 66 வயதில் மவுத்தார்கன்பயிற்சி செய்ய தொடங்கினேன். எனக்கு நானே குரு.ஒரு வெறியுடன் அசுர சாதகம் செய்தேன், என்னுடைய முதல் பாடல். 10.11.2014 ல் யு டியூபில் வெளியிட்டேன். இணைப்பு.https://youtu.be/ozR4AzmMJqY
நேற்றுவரை 242 ஹிந்தி,தமிழ்,கன்னட, தெலுங்கு மலையாளம் ஆங்கிலம் திரைப்பட பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும், தமிழ் பக்தி பாடல்களும் வெளியிட்டுள்ளேன்.இதில் நானே இயற்றி பாடியுள்ள பல பாடல்களும் அடங்கும். தங்கள் வருகை எனக்கு புத்துயிர் அளித்துள்ளது. மீண்டும் நன்றி.